Thursday, September 15, 2005

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன.

அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார்.

இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை யாரும் விமர்சனம் செய்துவிடக்கூடாது. என்ன நியாயம் இது?

நேசகுமார் என்பவர் யார்? உலக உயர்விற்கும் மனித மேம்பாட்டிற்கும் பாடுபாடும் மனித சேவகரா? அல்லது மதங்களின் தத்துவங்கள் அறிந்த ஓர் யோகியா? புழுத்துக் கிடக்கும் சேற்றை எடுத்து பிறர் மீது வீசிக் கொண்டிருக்கும் ஓர் அரைகுறை சிந்தனையாளர். ஒரு சாதாரண மனிதர். அவ்வளவுதான். சாதாரண மனிதரான இவருக்கே இத்தனை வருத்தம் என்றால் உலக மக்களின் ஐந்தில் ஒருவர் பின்பற்றும், போற்றும் மாபெரும் மனிதரான முஹம்மது (ஸல்) அவர்களை சரியான ஆதாரமின்றி தனிப்பட்ட முறையில் இகழ்ந்தும் அவமதித்தும் எழுதி வருவதை எப்படி அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். இவருக்கு இஸ்லாத்தையும் நபிகளாரையும் பிடிக்காமல் இருக்கலாம், அது அவருடைய சிந்தனைக்கும் உரிமைக்கும் உள்ள விஷயம்.

இவர் என்ன கொள்கை விவாதமா செய்துவருகிறார், அவரிடத்தில் மதங்களில் மண்டியிருக்கும் தத்துவக் கோட்பாடுகளை விவாதிப்பதற்கு? இவரின் இஸ்லாமிய மறுப்பு அல்லது எதிர்ப்புக் கொள்கைகளை கடைபோட்டு விற்க முயலும்போது எதிர்ப்புகள் வரத்தானே செய்யும். அதற்கு ஏன் இத்தனை வருத்தம்?

நல்லடியாரின் மறுப்புக் கட்டுரை அதிலும் தமிழோவியத்திலேயே வருவதை எதிர்பார்க்காத நேசகுமார் சற்று மனம் தளர்ந்து போனதென்னவோ மனித இயல்புதான், அதற்காக இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தனது உண்மை முகத்தை இத்தனை வேகமாக, கேவலமாக வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்தி இருப்பதுதான் எனக்கும் சற்று வருத்தமாக இருக்கிறது. அதிலும் ஆரோக்கியம் என்றொரு (நேசகுமாரை விட) தகுதியிலும் சிந்தனையிலும் குறைவான ஒரு மனிதரின் கட்டுரைகளை மேற்கோள் காட்டும் அளவிற்கு வேதனைப் பட்டிருப்பது அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தகுதிக்கும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

முழுமையான எதையும் முழுமையற்ற ஒன்று உணரவோ அறியவோ முடியாது. முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையை முழுமையற்ற மனித அறிவால் முற்றிலும் உணரமுடியாது. முழுமை அடையத் துடிக்கும் மனிதப் போராட்டத்தில் எவன் ஒருவன் தான் முற்றிலும் அறிந்தவன் என்று நினைக்கின்றானோ அவன் தன்னை முற்றிலும் உணராதவன்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இந்தியா மிகப்பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அதனால் இவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டதாகவும் எங்கோ புலம்பியதை இங்கும் வந்து புலம்பியிருக்கிறார் நேசகுமார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்றால் என்ன என்று தெரியாமல் காஷ்மீர் அரசியல் போராட்டத்தை இஸ்லாமிய அடிப்படைவாதப் போராட்டம் என்று புரிந்து வைத்திருப்பதிலிருந்தே தெரிகிறது இவரின் அரசியல் அறிவு எத்தனை என்று. முஸ்லீம்கள் எது செய்தாலும் அது இஸ்லாமிய அடிப்படைவாதம், முஸ்லீம் அல்லாதவர்கள் தீவிரவாதிகளாயிருந்தால் அது தனிப்பட்ட அல்லது ஒரு குழுவிற்கு சொந்தமான விஷயம். எத்தனை நாளைக்குத்தான் இப்படி சொல்லிக் கொண்டு திரிவது நேசகுமார் அய்யா?

நக்சலைட்டுகளாலும், மாவோ தீவிரவாதக் குழுக்களாலும் இந்தியா ஆண்டிற்கு பல லட்சக் கோடிகளை இழந்து வருகிறது அதற்காக வருத்தப் படமாட்டீரோ? இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே நடக்கும் பிரிவினைப் போராட்டத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட கோடிகளை இந்தியா இழந்திருக்கிறது, இது எந்த அடிப்படைவாதம் அய்யா? இதற்காகக் கூட இந்தியரான நீங்கள் வருத்தப்பட மாட்டீர்களோ?

அதுசரி, எல்லாவற்றிர்க்கும் ஒரு மனிதன் வருத்தப்பட ஆரம்பித்தால் வாழமுடியாமா என்ன? நல்ல லாஜிக்தான் நேசகுமார். எனக்கு எது பிடிக்கவில்லையோ அதைத்தான் நான் எதிர்க்கமுடியும், சரிதானே அய்யா? அதைத்தான் சொல்கிறேன் உங்களுக்கு இஸ்லாத்தைப் பிடிக்கவில்லை, அதைப் பின்பற்றும் முஸ்லீம்களைப் பிடிக்கவில்லை, அதனால்தான் எதிர்க்கிறீர்கள். உங்களின் கீழ்கண்ட வரிகளையே எடுத்துக் கொள்வோம்!

ஒரு மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அவசியம் மற்ற மதத் தீவிரவாதங்களை எதிர்க்க வேண்டுமா? அதே போன்று, ஒரு மதத்தின் அடிப்படைவாதத்தை, அது தூண்டும் வன்முறையைக் குறித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் அவசியம் தமது மதத்தின் முறைகேடுகளை, பழமைவாதத்தை, மூடநம்பிக்கைகளை விமர்சித்துவிட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?அப்படி நீங்கள் கருதுவீர்களேயானால், எந்த விஷயத்திலும் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நிச்சயமாக தனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பவன் தான் பக்கத்து வீடு சுத்தமாக இல்லை என்றால் ஆலோசனையும், அறிவுரையும் வழங்க முடியும். அப்படி செய்பவனின் அறிவுரையைத்தான் உலகம் மதிக்கும். என் வீடு இப்படித்தான் நாறிக் கிடக்கும், ஆனால் எனக்கு அடுத்த வீட்டைப் பற்றி விமர்சிக்க உரிமை இருக்கிறது என்று சொல்பவர்களின் மூளை நிச்சயமாக அழுகித்தான் இருக்கிறது என்று அர்த்தம்.

நேசகுமாருக்கு மதங்களைப் பற்றித்தான் சரியான சிந்தனை இல்லையென்றால் அரசியலிலும் அப்படித்தான் இருப்பது மிகவும் பரிதாபமான ஒன்று. அவரின் கீழ்கண்ட வரிகளைப் பார்போம்.

உதாரணமாக இடதுசாரி கோட்பாடுகளை விமர்சிப்பவர்கள் முதலாளித்துவத்தை விமர்சித்துவிட்டுத்தான் அங்கே செல்ல வேண்டியிருக்கும்

இடதுசாரியை விமர்சிப்பவன் முதலாளித்துவத்தையும் விமர்சிக்கிறான் என்றால் அவன் ஒட்டு மொத்த அரசியலையே விமர்சிக்கிறான் என்று அர்த்தம். அதுவல்லாமல் இடதுசாரியை மட்டும் விமர்சிக்கின்றான் என்றால் அவன் முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை என்றுதானெ அர்த்தம். நேசகுமாரும் அப்படித்தான். இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டும் எதிர்த்து இந்துத் தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்றால் இந்து தீவிரவாத ஆதரவாளர் என்றுதானே உலகம் நினைக்கும்.

நான் அப்படியில்லை எல்லா தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் என்று எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் எதிராக நேசகுமாரால் குரல் கொடுக்க முடியுமா? இல்லை என்றால் இந்த வார்த்தை ஜாலங்கள் எதுவும் இங்கு வேண்டாம்.

தனது கருத்தைச் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது கருத்து மோதலாக இல்லாமல் அவமதித்தலும், வெறும் ஆதாரமற்றவைகளைக் கொண்டு தானாக ஒரு முடிவுக்கு வந்து சேற்றை வாரி அடித்தால் அதற்கு பெயர் உரிமை இல்லை. உரிமை மீறல் என்று அர்த்தம்.

ஒன்றை எதிர்த்து மற்றொன்றை எதிர்க்க மறுப்பவன் தனக்கு சாதகமானதை மட்டும் செய்யக்கூடிய ஒரு சுயநலவாதி என்றுதான் பொருள்படும். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பவன் தான் முதுகெலும்பு உள்ளவன்.

அய்யா, இந்துக்களின் கடவுள்களையோ அல்லது அவரது கொள்கைகளையோ இன்றுவரை நானும், அபு முஹையும், நல்லடியாரும் ஒரு போதும் கிண்டலடித்ததோ அல்லது விமர்சித்ததொ கிடையாது. காரணம் விமர்சிக்கும் அறிவும் ஆற்றலும் இருந்தாலும் அது ஒரு இனத்தின் நம்பிக்கை அதை புண்படுத்தும் விதத்தில் எதுவும் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் கண்ணியம் காத்து வருகிறேன்.

பகவத் கீதையில் உள்ள கருத்துக்களை ஒரு இந்துவின் பார்வையிலிருந்து என்னால் விளக்கமாக தரமுடியும். 'கீதையின் ஜிஹாத்' என்று ஒரு விளக்கமான கட்டுரையை பிரசுரிப்பது மட்டுமல்லாமல் புத்தகமாகக் கூட வெளிக் கொணர முடியும், இறைவன் நாடினால். ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கையைக் கூட என்னால் விளக்க முடியும். பைபிளில் உள்ள தீவிரவாதக் கருத்துக்கள் முதல் பிற மத மக்களை வெறுக்கவும் கொல்லவும் சொல்லும் வசனங்களை மேற்கோள் காட்டி விவாதிக்க முடியும்.

இங்கு யாரும் குண்டு சட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை. நியாயமான கொள்கை மற்றும் கருத்து விவாதமாக இருந்தால் வாருங்கள் விவாதிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதுதான் விளைச்சளாக இருக்கும். முதலில் நல்லடியாரின் மறுப்புரைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பிறகு பின்னூட்டமிடுங்கள்.

அழுகியது முட்டையாகவே இருக்கட்டும் உங்களின் மூளையாக இருக்க வேண்டாம்.

16 comments:

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
அழகப்பன் said...

malik said...
//தனிப்பட்ட நபரை விமர்சிக்காமல், அவர் சார்ந்துள்ள கொள்கையை விமர்சிப்பதே சிறந்தது என தங்களுக்கு கூற விரும்புகின்றேன். //

//ஒருவரின் உணர்வினை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று யாராலும் எதிர்பார்க்கமுடியாது. //

மாலிக் உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்து சொல்லும் அதே வேளை நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். சரியாகத்தான் கூறியுள்ளீர்களா? நேசகுமாருக்கு ஒரு நீதி அப்துல்லாஹ்விற்கு ஒரு நீதியா?

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
Abdullah said...

மாலிக்,

வணக்கம். உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

Abdullah said...

திருக் குர்ஆனுக்கு எதிரான கருத்துகள் கொண்ட ஹதீஸ்கள் எதுவும் இஸ்லாத்தில் இல்லை. அப்படி ஏதேனும் இருப்பதாக யாரேனும் எடுத்துக் காட்டினால் அது ஆதாரமற்ற ஹதீஸ் என்பதை நிரூபித்துக் காட்ட முடியும் (இன்ஷா அல்லாஹ்).

மாலிக் அவர்கள் எனது முந்தைய பதிவான 'எது ஆதாரம் எது ஆதாரமற்றது' என்ற பதிவைப் படித்தால் ஹதீஸ் தொடர்பான அணுகுமுறைகளையும் கருத்துகளையும் அறிந்துக் கொள்ளலாம் (அவருக்கு ஆர்வமிருந்தால்).

Abdullah said...

நேசகுமாரின் ஆரம்பகால இஸ்லாத்திற்கு எதிரான கட்டுரைகளை படித்தால் அதில் ஓரளவு ஆதாரங்களைக் காட்டி தவறான முறையில் மேற்கோள் செய்து எழுதியிருப்பதைக் காணலாம்.

அதன் பிறகு அவருடைய ஆதாரங்கள் எதுவும் முழுமையல்ல, அதில் பெரும்பாலானவைகள் வேண்டுமென்றே திரித்தும் மறைத்தும் எழுதப்பட்டவை என்று அவருடைய எழுத்திலிருந்தே ஆதாரத்துடன் விளக்கப்ட்டவுடன் அதற்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

அதற்கு பின் ஆதாரங்கள் காட்டுவதை நிறுத்திவிட்டு சகட்டு மேனிக்கு நபிகளாரையும், திருக் குர்ஆன் வசனங்களையும் இகழ்ந்து வந்தார்.

அதற்கு பின் நபிகளாரை எந்த அளவிற்கு தரக்குறைவாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவிற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் எழுதத் தொடங்கினார்.

தற்போது அவருடைய உண்மையான வக்கிரங்களை உக்கிரமான முறையில் எடுத்துக் காட்டுவதன் அவருடைய அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தவுடன் விவாதத்தை திசை திருப்பும் நோக்குடன் தன் மீது பரிதாபம் ஏற்பட வேண்டும் என்று தேவையற்ற பாணியைக் கையாள்கிறார்.

இவை எல்லம் எதைக் காட்டுகிறது என்றால் 'சரக்கு தீர்ந்துவிட்டது' என்பதையே. Very soon he will be fully exposed. The mask that he carries will have no value to his future. ஒரு வகையில் அவரால்தான் இந்த தமிழ்மணத்தில் இஸ்லாமியக் கருத்துகளும் முஸ்லீம் வலைப்பதிவர்களும் அதிகமாக தோன்ற ஆரம்பித்தன. அவர் தொடர்ந்து எழுத வேண்டும், அதன் மூலம் நிறைய இஸ்லாமியக் கருத்துகளை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். இறைவன் அவருக்கு நேர்வழி காட்ட போதுமானவன்.

Abdullah said...

பகவத் கீதையை பற்றி கிண்டலடித்து எழுத வேண்டிய அவசியமில்லை. நேர்மறையாகவே பகவத் கீதையின் ஜிஹாத் என்று எழுதலாம். வேற்றுமையை பெரிது படுத்தாமலும் விவாதம் செய்ய இயலும். அதற்கான அறிவும் ஆற்றலும் இறைவன் கொடுத்துள்ளான். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக சிந்திக்கும் நேசகுமார் போன்றவர்களுக்கு எனது மேற் சொன்ன கருத்துகளை புரிந்துக் கொள்வது சிரமம்தான் என்பதை நான் உணர்கிறேன்.

அப்துல் குத்தூஸ் said...

அப்துல்லாஹ் அவர்களே, நேசக்குமாரின் மூளை அழுகியதாகத் தெரியவில்லை அடகு வைக்கப்பட்டதாகத்தான் நான் நினைக்கின்றேன்.

மாலிக் அவர்களே, ஒரு கொள்கைக்கு வரும்பொழுது எதை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றுகின்றீர்களோ? அதே அளவுகோளைக் கொண்டுதான் உங்களின் மாற்றுக் கொள்கையைக் கொண்டவர்களை எடைபோட வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களின் விருப்பு, வெறுப்புகளை திணிக்கக் கூடாது.

உதாரணமாக : எதன் அடிப்படையில் குர்ஆனை அல்லாஹ்வின் வேதம் என நீங்கள் முடிவு செய்தீர்கள் என விளக்க முடியுமா? இந்த அடிப்படைக்கு மாற்றமாக ஹதீஸ்கள் உள்ளன என முடிந்தால் இங்கோ அல்லது உங்களின் தனிப்பதிப்பாகவோ வெளியிட்டால் நீங்கள் எங்கு சறுக்கினீர்கள் என இன்ஷா அல்லாஹ் நாங்கள் உங்களுக்கு விளக்குவோம்.

மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
மு மாலிக் said...
This comment has been removed by a blog administrator.
அப்துல் குத்தூஸ் said...

//* குர்-ஆனை நம்பக் காரணம் கேட்டுள்ளீர்கள். குர்-ஆனின் நம்பத்தன்மைக்கான காரணம், அது, ஓதக் கேட்கப் பட்டவர்களாலேயே பதிவு செய்யப்பட்டது என்பது தான்.
முகம்மதானவர் இறைத்தூதர் எனும் நம்பிக்கையிருந்தால், மேற்கூறிய காரணமே குர்-ஆன் இறைவேதம் என்பதற்குப் போதுமானது. அவர் இறைத்-தூதர் என்பதற்கு அவர் கொண்டுவந்திருக்கும் செய்தி (குர்-ஆன்)போதுமானது. ஆக குர்-ஆனே அவர் இறைத்-தூதர் என்பதற்கும் தான் இறைவேதம் என்பதற்கும் போதுமானது என்று கருதுகிறேன். *//


குர்ஆனின் நடைமுறை விளக்கமே ஹதீஸ். குர்ஆனை பதிந்தவர்கள்தான் இந்த நடைமுறை விளக்கப்படி (ஹதீஸ்) வாழ்ந்து,பாதுகாத்து வந்தார்கள். மற்றவர்களும் அதனை பின்பற்ற வேண்டும் என அறிவுறித்தினார்கள்.

குர்ஆனை எந்த ஒரு சமுதாயம் பாதுகாத்து வந்ததோ, அதே சமுதாயம்தான் இந்த நபி (ஸல்) வழிமுறையும்(ஹதீஸ்) பாதுகாத்து வந்தது.

குர்ஆனை பின்பற்ற என்ன அளவுகோலைக் கொண்டுள்ளீர்களோ? அதே அளவுக்கோலைக் கொண்டுதான் ஹதீசும் திரட்டப்பட்டது அதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். இல்லையென்றால் குர்ஆனையும் சந்தேகத்திற்கு உள்ளாக்க நேரிடும் என்பதை அறியவும்.

குர்ஆனை விளங்குவதற்கு ஹதீஸை எடுக்கவில்லையென்றால் நீங்களும் நேசக்குமார்,ஆரோக்கியம் இன்னும் பலரைப்போன்று இஸ்லாத்திற்கு புதிய விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான்.

Anonymous said...

Ada "Chandala" Eppadiya pottu Udaippathu.

Nesa Kumar - Hindu Mask, Arokkiyam - Christian Mask, enomino - Buddist Mask, Malik - Muslim Mask......

Welcome to the new member added now in Nesam Group & Co Pvt Ltd.

அட்றா சக்கை said...

ஏண்டா பையா, ஒனக்குத் தூக்கம் வரலேன்னா ஒன்னோட பிளாக்குல போயிப் பொலம்பு..இங்கே வந்து ஏன்பா பீட்ட்ரு உடறே?

நீ சொன்னத அப்டியே திரும்பப் படிச்சுப்பாத்தா ஒன்னு புரியுது.. ஒனக்கு இந்துயிசமும் தெர்ல இசுலாமிசமும் தெர்ல. ரொம்பக் கொழம்பி ரொம்பப் பொலம்பி மேல்மாடி காலின்னு திரும்ப ஒருவாட்டி புரூவ் பண்ணிட்டே..