Thursday, March 31, 2005

நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்

இஸ்லாத்தின் தோலை உரித்துக் காட்டுகிறேன் என்று தொடங்கிய நேசகுமார் அவர்கள் தனது விமர்சனங்களும் விளக்கங்களும் என்ற பதிவில் அவருடைய தன்னிலை விளக்கத்தை படிக்க நேர்ந்தது. தனி ஒரு மனிதனாக போராட வேண்டியிருக்கிறது, நானும் குடும்பஸ்தன், பன்முகங்கள் பல கொண்டவன், சமுதாய வாழ்க்கையில் பங்கு கொள்ளல் என்றெல்லாம் தனது இயலாமையை, இயல்பை எழுதியிருந்தார்.

அவரின் இந்த விஷப்போராட்டத்தில் தனது உண்மையான முகம் வெளிப்படப் போகிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ளும் நேரம் துவங்கிவிட்டதென்பதே அவரின் இத்தன்னிலை விளக்கத்தின் காரணம்.

சத்தியத்தை எடுத்தியம்புவது, அதை எப்பாடு பட்டாகிலும் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடுவது என்று முடிவெடுத்து சத்தியத்திற்க்காக போராடும் ஒரு மனிதன் தனது இயலாமையை இப்படியெல்லாம் பறைசாற்ற மாட்டான். காரணம் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை எப்படியாயினும் நிலை நிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியும் அதற்கான உதவியும் தன்னிடத்திலிருந்தே அவன் தேடிக் கொள்ளவேண்டுமே தவிர்த்து, தன்னால் இயலவில்லையே என்று புலம்புவது சரியல்ல.

நேசகுமார் உள்வாங்குதலும் காலம் தாழ்த்துதலும் என்று ஒரு நல்ல விளக்கம் அளித்திருந்தார். இப்படி காலம் தாழ்த்துதலும், உள் வாங்குதலும் ஒரு கருத்தை சொன்ன மனிதன் தனது கருத்தை பிரிதொரு நேரத்தில் அலசிப் பார்க்கவும் அது சரியா தவறா என்று அந்த மனிதனே புரிந்துக் கொள்ளவும் அவகாசம் இருக்கும் என்றெல்லாம் நல்ல விளக்கம் கொடுத்தார். பிரச்சினை என்னவென்றால், இப்படி விளக்கம் கொடுததவர் எப்போதாவது தான் எழுதியதை திரும்பிப் பார்த்திருப்பாரா? தான் எழுதியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று உள்வாங்குதல் செய்திருப்பாரா?

இல்லை. செய்வதில்லை என்பது அவரது இத்தனை கால இடைவெளி இருந்தும் எதையாவது எழுதி வைப்போம் என்பதிலிருந்து நன்றாக காட்டுகிறது. காரணம் மிகச் சாதாரணமானது. அதாவது, உள்நோக்கு நிறைந்த அவதூறு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் எழுதி வருகிறார்.

அப்படி அவர் எழுதியதிலிருந்து தற்போது எனது இரண்டாவது கேள்வியாக இங்கே முன் வைக்கிறேன். இதுவரை எனது முதல் கேள்விக்கு பதில் இல்லை. பகரமாக ஹமீது ஜாபருக்கு பதில் சொல்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தும் அவர் எவ்வாறு தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதை நான் பிறகு எழுதுகிறேன். காரணம் இன்று அவர் எழுதியதிலிருந்து ஒருவேளை தனது உள்வாங்குதல் என்ற பயிற்சியை தொடங்கலாம் அல்லவா? அதற்கு இன்னுமோர் அவகாசம் கொடுப்போம்.

இரண்டாவது கேள்விக்கு வருகிறேன்.

நேசகுமாரின் இஸ்லாத்திற்க்கு எதிரான விஷப் பிரச்சாரத்திற்கு இன்னுமொரு ஆதாரம். நேசகுமார் தனது கட்டுரைக்கு ஆதாரத்தை தருகிறேன் என்று அவ்வப்போது எவ்வாறு மறைத்தும் திரித்தும் எழுதுகிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம். இவரின் கீழ் கண்ட கட்டுரையில்


சமுதாயத்தில் நிகழும் வன்முறைகள்:

கற்பழிப்புகள் இஸ்லாமிய ஷரியத் சட்டம் அமலில் உள்ள நாடுகளில் பெரும்பாலும் போலீஸாருக்குத் தெரியப் படுத்தப்படுவதில்லை. காரணம், தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை. நிரூபிக்க முடியாமல் போனால், அந்தப் பெண்ணை முறைகேடான உறவு வைத்ததற்காக கல்லால் அடித்துக் கொல்ல இஸ்லாமிய ஷரியத் வழிவகை செய்கிறது. இதனாலேயே, இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்பு பற்றிய புகார்கள் மிகவும் குறைவாகவும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும் காணப்படுகிறது.

பொதுவாக இதுபோன்ற கற்பழிப்பு சம்பந்தப்பட்ட குற்றங்கள் அமெரிக்காவில் அதிகமாகவும், சவுதி அரேபியா பொன்ற நாடுகளில் குறைவாகவும் நடப்பதை அவ்வப்போது கோடிட்டு காட்டுவது முஸ்லீம்களுக்கு வழக்கம், ஆனால் அதற்கு புதிதாக ஒரு ஷரீஅத் சட்டத்தை காரணமாக கற்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நேசகுமாரின் மேல் சொன்ன கட்டுரையில், இரண்டு விஷயங்களை ஒன்றாக குழப்பி இஸ்லாத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விஷமத்தனாமாக அறிமுகப் படுத்தியிருப்பதை பார்க்க முடிகிறது. இஸ்லாம் சொல்லும் அவதூறு செய்பவர்களுக்கான குற்றவியல் சட்டத்தை, கற்பழிப்புக்கான தண்டனை என்று இரண்டையும் குழப்பி தன் விஷ வாதத்திற்கு ஆதாரம் தேடியிருப்பதை காணலாம்.

ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் சமூகத்தில் அவளுக்கு ஏறபடக்கூடிய விபரீதமும், ஒரு ஆணைப் பற்றி தவறாக பேசினால் அவனுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவே ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு ஏனோ தானோவென்று அவதூறுகள் கூடாது என்பதற்காக அவதூறு தொடர்பான ஷரீஅத் குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணைப் பற்றி யாரேனும் அவதூறு சொன்னால், தான் சொன்ன குற்றத்தை அவதூறு சொன்னவர் நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். அப்படி அவரால் தனது குற்றச்சாட்டை நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவதூறு சொன்னவருக்கு பொது இடத்தில் மற்றவர்களுக்கும் பாடமாக அமையும் வகையில் 80 கசையடிகளை கொடுக்க வேண்டும், மேலும் அந்த மனிதனது சாட்சிகளை இனி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடது என்று இஸ்லாம் சொல்கிறது. இது அவதூறு தொடர்பான ஷரீஅத் சொல்லும் குற்றவியல் சட்டம். இதனைத்தான் கற்பழிப்பு சட்டத்துடன் முடிச்சுப்போட்டு, கற்பழிக்கப்பட்ட பெண் நான்கு சாட்சியத்துடன் வரவேண்டும் என்று சொல்கிறார்.

அவர் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் கற்பழிக்கப் பட்ட பெண் அங்கும் இங்கும் அலைந்து தானெ ஒரு புலன் விசாரனை செய்து, நான்கு சாட்சிகளை தேடி அவர்களுடன் கூட்டமாக சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்று தனது குற்றச்சாட்டை பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் அந்தப் பெண்ணையே கல்லால் அடித்து கொல்லப்படுவாள் என்று கதை நீட்டி இருக்கிறார் நேசகுமார். அதானால்தான் இஸ்லாமிய நாடுகளில் புகார்கள் குறைவாக இருப்பதாகவும் காரணம் கண்டுபிடித்துள்ளார்.

நேசகுமார் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். அவரே வேறொரு கட்டுரையில் கீழ்க் கண்டவாறு அவதூறு தொடர்பான குற்றவியல் சட்டத்தை அவருடைய வார்த்தைகளிலேயே விவரிப்பதை பார்க்கலாம்.

இவரின் "இஸ்லாத்தில் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும்" (x) என்ற கட்டுரையில், முகம்மது நபி போர்களத்திலிருந்து திரும்பி வரும்வழியில் தங்கியிருக்கும்போது. மல ஜலம் கழிப்பதற்காக கூடாரத்திற்க்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகம்மது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர். திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே, அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் என்றும் சஃவான் என்ற முஸ்லீம் ஆயிஷாவை அடையாளம் கண்டு முகம்மது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார். ஆனால் இந்த நிகழ்வின் தொடர்பாக ஆயிஷா அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது என்றும்


இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 "எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."

என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு கூறப்படுவது கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்வது சம்பந்தமான குற்றவியல் சட்டம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இதனை கற்பழிப்புக்கான சட்டம் என்று தனக்குத் தொன்றியதை வைத்து விஷம் கக்குவது ஏன்?

இஸ்லாத்தை பற்றி ஆதாரத்துடன் விமர்சனம் செய்கிறேன் என்று சொல்லும் நேசகுமார் எடுத்துவைக்கும் ஆதாரமெல்லாம் இத்தகையதுதான்.

கற்பழிப்புக்கும், கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் எழுதுவதுதான் நேர்மையான விமர்சனமா?

இவர் சொன்ன
"தாம் கற்பழிக்கப் பட்டதை நேரில் பார்த்த நான்கு ஆண் சாட்சிகளை ஒரு பெண் சுட்டிக் காட்டி, அவர்களும் அவ்வாறு பார்த்ததை இஸ்லாமிய நீதிமன்றங்களில் தெரிவித்தால் மட்டுமே கற்பழித்தவனுக்கு தண்டனை".
என்ற வாதத்திற்கு ஆதாரம் தரவேண்டும்.

எந்த ஷரீஅத் சட்டம் அல்லது எந்த திருக் குர்ஆன் வசனம் அல்லது எந்த நபிமொழியில் இப்படி பதியப்பட்டுள்ளது என்ற ஆதாரமும் விளக்கமும் வேண்டும்.

அது மட்டுமல்லாமல். இவரின் இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டுமென்பதே எனது விருப்பம். காரணம் அவர் ஆங்கில மொழிகளில் இஸ்லாத்தை எதிர்க்கும் யூத, கிருஸ்தவர்களால் எழுதிவைக்கப்பட்ட இஸ்லாத்திற்கெதிரான இத்தகைய நுணுக்கமான அவதூறு விஷயங்களை தமிழில் எழுதுவதன் மூலம் இவைகளுக்கு பதில் அளிக்க என்னைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் வழியாக குறைந்த பட்சம் ஓரளவாவது மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தின் மேல் உள்ள அவதூறுகளை புரிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

நேசகுமாரின ஆதாரத்திற்கு காத்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன், உங்களின் பதில்களும் ஆதாரங்களும் தாங்கள் தெரிவித்த மேலே சொன்ன கேள்வியை ஒட்டியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

_____________________
x] http://www.thinnai.com/pl11110410.html

6 comments:

Abdullah said...

Bhaiya,

Aap phir Ek phar mera article ko padliye, phir smaj bhi ayeega.

We are not talking logic here. We cannot use the same logic everywhere. We are talking of Islamic jurisprudence. My article based on the Quran and other Prophet traditions.

What is taken or not taken in Jamath is not issue here. The issue is what Islam says.

Please read once again the article to clear your doubts.

It is easy for ordinary people like you to interpret the Quranic verses and use your own logic. But that is not the case here.

'I know everything' attitude is the first sign of ingnorance and dangerous to you.

Avoid ill conceived comments and offer conclusive explanations if you are not agreeing.

நல்லடியார் said...

//if a woman complains that she was raped by smoebody, she has also to prove it by showing four male witnesses.//

அன்பரே,

கற்பழிக்கப் பட்ட பெண் நான்கு சாட்சிகளைக் காட்ட வேண்டியதில்லை. அவள் ஒருத்தியின் குற்றச்சாட்டே போதும். இதை கீழுள்ள ஹதீஸ் மூலம் அறியலாம்.

"நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி தொழுவதற்காகப் புறப்பட்டார். அவரை ஒரு ஆண் கண்டு போர்வையால் போர்த்தி அவரைக் கற்பழித்து விட்டார். அவள் சப்தமிட்டதும் அவன் ஓடி விட்டான். வேறொரு ஆடவர் அவளருகே வந்தார் இந்த மனிதன் என்னைக் கெடுத்துவிட்டான் என்று அப்பெண் கூறினாள். முஹாஜிர்களில் ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்ற அப்பெண் ''இந்த மனிதன் என்னைக் கெடுத்து விட்டான்'' என்ற கூறினார். யார் அவளைக் கெடுத்ததாக அப்பெண் அடையாளம் காட்டினாளோ அவரைப் பிடித்து வந்தனர். ''அவன்தான்'' என்று அப்பெண் அடையாளம் காட்டினாள். நபி (ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வரப்பட்டு கல்லெறியுமாறு உத்தரவிடப்பட்டதும் அப்பெண்ணை உண்மையிலேயே கெடுத்தவர் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் நீ செல்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்'' என்று கூறினார்கள். (தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள். அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள். ''மதீனாவாசிகள் அனைவரும் எந்த அளவு தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டால் ஏற்கப்படுமோ அந்த அளவு இவர் தவ்பா - பாவமன்னிப்புக் கேட்டு விட்டார்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர், வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) திர்மிதீ, அபூ தாவூத் )

//*எனக்கு தெரிந்து கற்பழிப்பு குற்றங்களை செய்த எந்த ஆணும் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டதாக தெரியவில்லை. வறலாற்றில் கூட நான் கேள்விபடவில்லை.*//
ரோஸா வசந்த் அவர்களுக்கு மேற்கண்ட செய்தியில் விளக்கம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
1. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை அடையாளம் காட்ட வேண்டும்.
2. பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டப் பெண் குற்றவாளி இல்லை - அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது.

3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.

4. கற்பழிக்கப்பட்டப் பெண், கற்பழித்தவனை ''இவன்தான் என்னைக் கெடுத்தான்'' என்று அடையாளம் காட்டினால் போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை என்பதை நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். (இது, கற்பழிப்பை நிரூபிக்க நான்கு சாட்சிகள் வேண்டும் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு)

5. ''அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளைக் கெடுத்தவன்'' என்று உண்மையை ஓப்புப் கொண்டு முன் வந்தவருக்கே கற்பழிக்கப்பட்டப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்கவில்லை! (என்பது ந.ராகவன் அவர்களின் கவனத்திற்கு)

நன்றி: அபுமுஹை


//because female witness is only half the value of a male's value according to your jurispudence and especially in cases of rape, woman witnesses are NOt taken into account by your Jamath.//

It is true that the Quran has instructed the believers dealing in financial transactions to get two male witnesses or one male and two females (2:282). However, it is also true that the Quran in other situations accepts the testimony of a woman as equal to that of a man. In fact the woman's testimony can even invalidate the man's. If a man accuses his wife of unchastity, he is required by the Quran to solemnly swear five times as evidence of the wife's guilt. If the wife denies and swears similarly five times, she isn't considered guilty and in either case the marriage is dissolved (24:6-11).

பணம், கொடுக்கல்-வாங்கல் போன்ற வர்த்தக நடவடிக்கைகலிள் மட்டும்தான் 1:2 சாட்சி. கற்பழிப்பு போன்ற குற்றவியல் வழக்குகளில் அல்ல. பார்க்க: இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சமமா?


//if a woman charges against the male who had raped her fails to bring four males to give witness, for having accepted the rape by self confession, the woman would be stoned to death on charges of adultery.//

4:15 உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்¢ அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.

24:4 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். - குர்ஆன்

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலில் பெண்களின் மீது குற்றம் சுமத்துபவரே நான்கு சாட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும்,தவறினால் 80 கசையடி கொடுத்து பொய்யன் என ஒதுக்கி வைக்கச் சொல்கிறது என்பதும் தெளிவாகிறது.

//That is why no affected woman is dare to lodge a complaint on rape. And you try to hide this like trying to hide a pumpkin in a bowl of rice! //

குர்ஆனும் ஹதீஸும் இவ்வளவு தெளிவாகச் சொல்லி இருக்கும் போது கற்பழிக்கப் பட்ட பெண் நான்கு ஆண் சாட்சிகளைக் காட்ட வேண்டும் என்று சொல்லும் நீங்களல்லவா முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறீர்கள்?

நல்லடியார் said...

Let me conclude with an assumption that Daraji & Bhiyaji are same blogger using different identity.

1) //Similarly, if a woman complains that she was raped by somebody, she has also to prove it by showing four male witnesses. That is why your so called prophet is silent about this// -Daraji said...9:03 AM

2) //கற்பழிக்கப் பட்ட பெண் நான்கு சாட்சிகளைக் காட்ட வேண்டியதில்லை. அவள் ஒருத்தியின் குற்றச்சாட்டே போதும்//- நல்லடியார் said...12:13 PM

3) //That is why your so called prophet is silent about this// -Daraji said...9:03 AM

4) //Your prophet pardons the woman as if she had committed the crime whereas she is the victim of the crime.// - Bhiyaji said...2:46 PM

5) //The real culprit, unable to see an innocent being punished in his place, admits in a weak moment that he had committed the crime.// -Bhiyaji said...2:46 PM

6) //(தவறாகப் பிடித்து வரப்பட்ட) மனிதரிடம் அழகிய வார்த்தைகளைக் கூறினார்கள்.//-நல்லடியார் said...12:13 PM

7) //For your prophet, rape is so simple to be pardoned like that since woman is the victim in cases of rape.//-Bhiyaji said...2:46 PM

8) //அப்பெண்ணைக் கெடுத்தவரைக் கல்லெறியுமாறு ஆணையிட்டார்கள்.
3. கற்பழித்தவனுக்கே மரண தண்டனை.//-நல்லடியார் said...12:13 PM

9) //If you are really sincere to go by your own jurisprudence, why don't all of you seek citizenship in countries like Saudi Arabia, and leave the rest of the world in peace?//

நல்ல நியாயம் சார். இந்தியராக இருக்க இந்துக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும் என்ற உங்கள் மனிதாபிமானம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

11) //If you insist on Burkha for your women, don't insist on your women for it in other societies and become aloof.//Bhiyaji said...2:46 PM

12) //your own mullahs punish innocents without any rhyme or reason.//Bhiyaji said...2:46 PM

மாற்று மத பெண்டிரெல்லாம் கட்டாயம் பர்தா அணிய வேண்டும் என்று எந்த முல்லா ஃப்தவா கொடுத்தார் என விளக்குவீர்களா? நீங்கள் சொல்வது சவூதி, ஈரான் என்றால் Nothing to compare it in India மேலும் கீழ்கண்ட உங்கள் கருத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்

"Abide by the rule of law of the country where you live and be friendly with your neighbors who are of other faith."Bhiyaji said...2:46 PM

//And you don't allow human rights people like us to fight for the rights of the affected people in your community saying that it is your own personal matter and others have no right to interfere!//Bhiyaji said...2:46 PM

If you are a real human right fighter, why you did not exigent in Kashmir, Gujrath, Afgan & Iraq etc...

13) //Every year, we try to help poor girls to continue their education. We help many Mohmeddan girls also to continue their studies. //Bhiyaji said...2:46 PM

14) //In fact, we have a poor Mohmeddan girl for our kitchen aid//Bhiyaji said...2:46 PM

Please refer your statement Nos.13) & 14) which is contradicts each other. You hold a girl in you kitchen and stopped her education!!!

15) //Also, we personally give money to Mohmeddan children to celebrate Ramzan with new clothes if they are very poor//Bhiyaji said...2:46 PM

I should appreciate your humanity.

16) //and nobody cares for them in your community and treated like beggars and offered substandard clothes just to fulfill their religious duty.//Bhiyaji said...2:46 PM

Do you know how Islam insist charity? In Islam charity is one of the compulsive and obligatory act in order to fulfill the duty to god. So, pls. stop lying against muslim.

17) //Many girls of your community had confessed to me that they feel suffocated in being in your religion but they cannot come out of it.//Bhiyaji said...2:46 PM

Do you know there is no obsession in Islam. It is our right to choose the freedom of faith. It is not necessary to quit from Islam to get freedom. We can stay inside and deny god by heart. That is enough to be a Non-Muslim.

18) //If you are serious about the welfare of the women of your own community, work for their liberation.//Bhiyaji said...2:46 PM

Hunky-dory. BTW, you did not show your way to liberation that gives Grundyism to women?

19) //There is no point in quarrelling amongst us. We are all children of GOD who is one only but each community calls Him differently according to its custom and belief.//Bhiyaji said...2:46 PM

Bravo!!!. Merely some of your points insisting us to accept the hidden agendum of extremists.

20) //These customs are location oriented and if you ape them thinking that you are following your religion, it is only foolishness.//Bhiyaji said...2:46 PM

Anew Bravo!!! Is it your freedom of thought? Go ahead...

21) //If you stop thinking that only your religion and your jurisprudence are great and salvation comes only through you, then you are getting secluded living in a fool's paradise.//Bhiyaji said...2:46 PM

My dear, it depends one's faith. Each religion talks about good for life and says it is good. If you find one's religious faith that is not matching with your belief is fault in your view of belief not in other religion. Open your eyes, think reasserted.

22) //If you think your prophet is the last one, keep it within your mind. Don't fight with others to make them accept it. As long as mankind exists, prophets are bound to come to guide people.//Bhiyaji said...2:46 PM

Muslim believes no more prophets to them. What is wrong in it? You have the right to believe yogis & Saints and/or seers as your prophet or template. No Muslim or Christian would fight against you not follow them.

You people showing much interest towards others faith. Have you seen any Muslim bloggers criticize your faiths? So, problem within you not from others. Please refer your next statement No.23)

23) //Unfortunately for you people, whom you call a prophet, was not a prophet//Bhiyaji said...2:46 PM

24) //if anybody says this truth, you will immediately bring in a fatwa to kill the person who had said that! That is how you respect a human being's freedom of thinking!//Bhiyaji said...2:46 PM

Please stop such stereotype allegation. If you are guileless prove it with victim not by simply mendacious and assumption.

25) //I just wanted to show you the other side of the thinking and give you an opportunity to rectify yourself. It is for you to be sane or remain insane.//

If I agree with your points, I am mentally faire. Otherwise arrogant isn't it? Heedful!!!

26) //Aaplog kyon bahut jaldisey garam hojaatey hain aur maar peet mey ghuz jaatey hain? Thandi dhimaaksey kyon soch nahin paatey hain?//

If you are pretty honest, should have words of truth. You started with false allegation that Mohammed was not justified the rape victims, we nonchalantly proved his undisputed credibility and justifications with enough evidence.

Actually you seemed hot and justify your comments by diverting the topic. We argued with Quran and Hadhees that can be referred by any one. But you?

My Dear Daraji+Bhiyaji, you know well that truth always sour to the charlatan.

Please come with enough proof before estrange others.

Brotherly,
Nalladiyar

Anonymous said...

//If you are really sincere to your prophet and jurispudence, you should ask for the implementation of shariya not partly but wholly involving both civil and criminal, as far as your community is concerned.//

Muslims must be think about this.

Islam is not partly obedient religion. If one belive ISLAM he must follow Full SHARIAH not only ACCEPT (WHEREEVER HE WILL).
So ALL MUSLIMS IN INDIA Must be think about this.
THANK YOU "DARAJI-BHAIYAJI" for your broad mind to serve only muslim girls by blocking their study and future.
WHAT A GREAT HUMAN(WOMAN)RIGHT ACTIVITY!
KEEP IT UP!
May GOD will support CHILDRENS like YOU!

Abdullah said...

Ji,

Ithna lamba comments? Kisliye bhaiya... kuyn aap ithna khuzza hogaiya bhaiya..

Let me put the things as clear as possible.

a) You have started comments with different subject and now you are jumping from one to another.

b) One cannot blame the system because it is mis-used rather one should blame the people who practice wrong.

c) You made wrong understanding of the article and that is being corrected, however, instead of correcting your observation you move on to other subject - again a blaming game.

c) It seems you are personally hurt and that is the reason you are giving ureasonable reply with your human rights activities and patroning of Muslim girls.

I hope my following reply would be in context of your comments.

1) Prohpet pardoned the woman - Yes, he said.. 'Allah pardoned you' from the sin because she is the victim and ordered punishment to the man who raped her. What do you expect? You want Prophet to order him to marry the victim?

2) Prophet also pardoned him - it is a wrong understanding by you. He is not pardoned. He is being stoned to death.

3) Jamath - I did not write 'not to consider the Jamath'. I wrote Jamath is not an issue here. The question and answer is in the context your 'women and men witness parameters' mentioned by you, not about Jamath.

4) //If you are very particular about your jurispudence, then why don't you insist on having the penal clauses of your shariya to try the crimes committed by you people? Why should you stick to civil code only// Shariah is not in Indian civil law and so forth of criminal law.

5) //why don't all of you seek citizenship in countries like Sudi Arabia// Why do we need? I have more right than you to live in India. Your divisive advises is exhibiting your inferior thinking and hatred towards Muslims.

6) //all religions have understood this and had given up the unsuitable aspects// I will be grateful to you, if you can give a proof from those understood religions, that they have decpacitated their holy books or removed those unsuitable aspects. Is there any religious edict passed by any of those religions to support your observation?

7) //Join the main stream, keeping your religion within your homes and places of worship.// We are in the mainstream of India. Don't spit the advises like seek citizenship of other countries that says you are not ready for mainstream life, not us. Further, in this tamilmanam, none of our Muslim bloggers propagating Islam. We are simply answering to the questions posed by people like you and correcting the misconceptions. Your comments in my blog is itself an excellent example.

8) Your human rights service and charity works - I appreciate and pray for your further services towards human beings and charity works. I have contact with atleast 10 different human right groups in South India and I do often help them by monitory services. It is not the Muslim women are the only victims of 'acid throws, burnings, severe beatings and thrown out of home. Hundreds of women irrespective of their religions is being subjugated and abused everyday in our country. So, please don't try to sell your charity and human right services in public. You are not alone doing such work. Since you brought this matter, I wish to mention few things to you (may God forgive me for disclosing those noble works) a) I do contribute heavy amount with my friends as education scholarship through a reputable weekly Tamil magazine, Tamil Nadu. We even don't want to know the name of those students and let the magazine to manage our scholarship works. (2) Established a small business for my non-Muslim friend (I don't want to him work for me rather I prefer him to start his own life by my financial help). (3) Water tanks and toilets for various villages in association with self financial scheme executed by TN State government (predomininatly non-Muslims).

This list can continue, but prefer to stop now. Because, instead of correcting you, it may look alike boasting of my charity works.

Gentlemen, don't try to interpret the things with pre-conceived mind.

Good luck and Good bye.

அட்றா சக்கை said...

அட என்னாங்கபா

அதான் யாருமே தமிழ்மணத்திலே கண்டுக்காம இருக்கிறதுனால இப்படி எதாவது விதண்டாவாதம் பேசி முன்ன வரலாம்ன்னு பாத்தா உடமாட்டீங்க போல இருக்கு..