Thursday, May 26, 2005

மறைத்தல், திரித்தல், பொய் பேசுதல்

கருப்பண்ணசாமியின் வரவால் நேசகுமாருக்கு 'கருப்பாவேசம்' வந்து மயிலாடுதுறை சிவாவின் 'இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா' என்ற பதிவில் வதவத (நன்றி ஆரோக்கியம்) என்று எனக்கு பதில் எழுதிவிட்டார். மூன்று மாத காலமாக இந்த கருப்பண்ணசாமி எங்கே போயிருந்தார்?

ஆக நான் கண்ணியமாகவும், மரியாதையாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரக்கில்லை என்பதால் பதில் இல்லை. கேட்டால், இன்னும் படிக்கவில்லை, யாராவது படித்து அதிலிருந்து ஒன்றிரண்டு முக்கியமானதை எடுத்துச் சொன்னால் பதில் சொல்கிறேன், பதில் சொல்வேணா என்று தெரியவில்லை என்று சமாளிப்புகள், தடுமாற்றங்கள் முடிவில் தலைமறைவு. வார்த்தை விளையாடல்கள் செய்து, ஒன்றை இரண்டாக்கி அல்லது ஒன்றுமே இல்லாததாக்கி எழுத சந்தர்ப்பம் கிடைத்தால் வதவத பதில்கள் வந்துவிடும்.

இரண்டில் இரண்டைக் கூட்டினால் நாலு வரும் என்று சொல்லத் தெரியாதவன், அல்ஜிப்ரா கணக்கு சொல்லிக் கொடுக்க மீசையை முறுக்கிக் கொண்டு வந்த கதையாய், சாதராணமாக நேசகுமார் எழுதியதிலிருந்தே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தற்போது தான் கண்ணியம் காத்ததாக கதை எழுதுகிறார். உலகில் கோடான கோடி மக்கள், முஸ்லீம் முஸ்லீமல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் போற்றும் நபிகள் நாயகம் அவர்களை, இவர் இகழ்ந்து பேசும் போது எங்கே அய்யா உங்கள் கண்ணியம் காணமல் போனது? அடுத்தவர்களுக்கு கண்ணியம் கொடுத்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்ற பொதுவான சாதாரண உண்மை உங்களுக்கு தெரியாமல் போனதேன்.

பொய் பேசுவது யார்?
எதைப் பொய் என்கிறீர்கள் அப்துல்லாஹ்? திருக்குர்ஆன் பொய் என்கிறீர்களா? இப்மு சஅது யூதர் என்கிறீர்களா? ஸஹி முஸ்லிம் இஸ்லாத்தின் எதிரி என்கிறீர்களா? அல்லது நபிகளார் பொய்யும் புரட்டுமாய் தனக்கு வசதிப்பட்டவாறு எதையெதையோ பேசிவிட்டுப் போனார் என்கிறீர்களா?

நீங்கள் பேசுவதுதான் பொய். எனது 'நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்' என்ற பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இல்லை, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள் நேசகுமார் அவர்களே? நீங்கள் பேசுவது உண்மைதான் என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் போது ஏன் உதறிவிட்டு போகிறீர்கள்? இதைத்தான் திராணியில்லை என்று உலகத்தார் சொல்வது, உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்குப் புரியும் என்று நான் நினைப்பது தவறோ என்னவோ தெரியவில்லை.

மனைவியிடம் காமத்தை அடக்க முடியாதவர் வழி காட்டியா?
நான் கேட்கிறேன், மனைவியிடம் ஏன் ஒருவர் காமத்தை அடக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை, விளக்கம் கொடுங்கள் நேசகுமார் அவர்களே! மனைவியிடம் காமத்தை அடக்கிக் கொண்டு, மற்ற பெண்களிடம் செல்பவர்களைத்தான் முற்றும் துறந்த முனிவர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்களோ? அப்படிப் பட்டவர்களின் வழிகாட்டுதலைத்தான் ஏற்றுக் கொள்வீர்களோ? கணவன் மனைவிகள் ஜாக்கிரதை! காமத்தை மனைவியிடம் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்று நேசகுமார் அவர்கள் புது விதி செய்து புரட்சி செய்ய இருக்கிறார். மனைவி இருப்பவர்கள் எல்லாம் இனி காமத்தை அடக்கி மோட்சம் பெறும் வழியை நேசகுமார் அவர்கள் சொல்லித் தருவார்! மனைவியிடம் தனது இச்சைகளை, உடல் பசியை தீர்த்துக் கொள்பவர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் இனி ஏற்றுக் கொள்ள அறுகதை அற்றவை என்று நேசகுமார் ஆலோசனை வழங்க வந்துவிட்டார்.

'சஹி முஸ்லிம், யாரோ ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்ட முகமது நபியவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ஜைனப் அவர்களை இழுத்து உடலுறவு கொண்டார்'

இது நேசகுமாரின் கூற்று.

இந்த செய்தி இங்கே அரை குறையாக நேசகுமாரால் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு பெயர்தான் 'மறைத்தல்' என்று பெயர். முழு செய்தியையும் சொல்லாமால் தனது வசதிக்கேற்றவாறு அதை கொச்சைப்படுத்திச் சொல்வதற்கு பெயர்தான் 'திரித்தல்'. இந்த இரண்டையும் செய்யும் மனிதர்களுக்குப் பெயர்தான் 'பொய்யர்'.

இங்கே குறிப்பிடப்படும் ஜைனப் என்பவர் யார்? நபிகாளாரின் மனைவி. இந்த செய்தியை சொன்னவர் யார்? நபிகள் நாயகம் அவர்கள். ஏன் சொல்கிறார்? காமப்பசி ஏற்படுபவர்கள், இவ்வாறு உணர்ச்சிவசப்படுபவர்கள், அதை தனது மனைவியிடம் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினைக்காகத்தான் அவ்வாறு அறிவிக்கின்றார். அதைத்தான் அந்த செய்தியின் முடிவில் இருக்கிறது. ஏன் இவ்வாறு சொல்லப்பட்டது? அந்த காலக் கட்டங்களில் உடலுறவு ஒழுக்கமற்ற, உணர்ச்சிகளுக்கு உந்துதலாகி தனக்கு சொந்தமில்லாத பெண்களிடம் உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது. அதை முஸ்லீம்கள் செய்யக் கூடாது என்பதுதான் இதிலிருந்து அன்றைக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம். இதை புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்தான் இதைக் கொச்சைப் படுத்தி இன்றைய கால மன நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் தேட முற்படுகின்றனர்.

இப்படி அநாகரீகப்படுத்தி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் கருப்பண்ணசாமியின் தயவில் நேசகுமார் வதவத என எழுதிவிடுவார். ஆனால் அறிவுப்பூர்வமான ஆழமான விவாதங்கள் என்று வந்தால் என்னவோ இவருக்கு மட்டும்தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்பது போல் அலுத்துக் கொள்வார்.

இந்த செய்தியைப் பற்றிய விவாதத்தில் இருக்கும் போது மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது தவறு, அது அவளுடைய உரிமையை மதிக்காதது என்றெல்லாம் இச்செய்திக்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் செய்யப்பட்டன. முதலாவதாக இங்கே 'அனுமதி இல்லாமல்' என்ற வார்த்தையே இல்லை. இரண்டாவதாக உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?

எங்கிருந்து வந்தார் இல்லாத மருமகள்?
நபிகளாரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள் அல்லது பதியப்படாத செய்திகள் என்ற ஒன்றும் இல்லை. நபிகாளாருக்கு பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைந்துவிட்டார்கள் என்றுதான் வரலாற்று குறிப்புகளும், ஆவணங்களும் தெரிவிக்கின்றன? அப்படியிருக்கும் போது எங்கிருந்து வந்தார் இந்த இல்லாத மருமகள்? இதற்கு பெயர்தான் 'திரித்தல்' நேசகுமார் அவர்களே.

பதில் தாருங்கள். காத்திருக்கிறேன்.

கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்?
பொதுவாக அனுமதி என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியும். மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட எல்லைகளுக்குக் கூட வரையறைகள், விதிமுறைகள் இருக்கும் போது இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஆலயமாக உலகத்தாருக்கு அறிவிக்கப்பட்ட மக்காவிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றது. அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால் கஃபாவில் நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. எப்படி அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் விசா வாங்க வேண்டும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு நேர வகையில் நடந்து கொள்வேன், அந்த நாட்டின் சட்டங்களை மதிப்பேன் என்றெல்லாம் உறுதி மொழி அளிக்க வேண்டுமோ அதே போன்று இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட கஃபாவிற்கு வருவதற்கு அந்த இறைவனிடம் உறுதி மொழி அளிக்க வேண்டும், அந்த உறுதிமொழிதான் ஏக இறைவனை ஏற்றுக் கொள்வதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்வது. இதை உளமாறச் சொல்லிவிட்டு நேசகுமார் அவர்களும் செல்லலாம், அவரை புலிப் பாண்டியும் தொடரலாம்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப்பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் வசனம் 9:28)

இந்த மேற்கண்ட வசனம், இணை வைத்து வணங்குபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கின்றது. இறைவனுக்கு இணை வைக்காமல், முஹம்மதை நபி என்று ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக செல்லலாம். இந்த வசனங்களில், கீழ் சாதி, சானாதனி என்ற பாகுபாடுகளெல்லாம் எங்கிருந்து வந்தது. நேசகுமாருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சனாதனியாக, மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அந்த இறைவனை, சிலைகளை இன்னும் என்னென்ன மாரியாதைக்கு உரியவைகளாக அவர்கள் கருதுகிறார்களோ அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள்தான், அவர்களுக்குள் வணங்குவதில் வேறுபாடு இல்லை, ஆனால் வெறுபாடுகள் பிறப்பினால்தான். விஷ்ணுவை மேல்சாதிக்காரணும் வணங்கலாம், கீழ்சாதிக் காரணும், ஆனால் கர்ப்பகிருகத்தில் செல்ல அனுமதி மேல் சாதிக்காரர்களுக்கு மட்டுமே.

ஆனால் இந்த இறை வசனத்தில் இணை வைப்பவர்களைத்தான் அசுத்தமானவர்கள் என்று சொல்கிறது. அது மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் சரி.

இந்த வசனத்திற்கும், நேசகுமாரின் கீழ்சாதி விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இதைத்தான் 'திரித்தல்' என்று சொல்வது.

கஃபாவின் கஸ்டோடியனுக்கு மிகுந்த மரியாதை
அது என்ன மிகுந்த மரியாதை? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். நாங்களும் புரிந்துக் கொள்கிறோம். இப்படி இல்லாததை சொல்வதற்கு பெயர்தான் பொய் பேசுதல் என்று பெயர்.

என்னவோ உலகத்திற்கு தெரியாத ஒரு விஷயத்தைச் சொன்னதுபோல் நேசகுமாரின் இந்த கண்டுபிடிப்புக்கு புலிப்பாண்டியின் ஜால்ரா? முடிந்தால் புலிப்பாண்டிக்கூட சொல்லலாம் அது என்ன பொல்லாத மரியாதை என்று, நாங்களும் தெரிந்துக் கொள்ளலாம்.

அஹமதியாக்கள்
அஹமதியாக்களைப் பற்றி ஏற்கனவே நேசகுமார் வேறு சில தளங்களில் எழுதிய திரித்தல் மறைத்தல் வேலைகளை படித்துதான் இருக்கிறேன். ஒன்று செய்வோமா நேசகுமார் அய்யா? எனது பழைய கேள்விகளுக்கு விரைவில் பதில் சொல்லுங்கள், பிறகு இந்த அஹமதியாக்களைப் பற்றி நாம் ஒரு சிறப்பான விவாதத்தைத் தொடங்கலாம்.

கஃபா உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம்
சரிதான். யார் இல்லை என்றது. அல்லாஹ்வின் அறிவிப்பின்படி கஃபா என்பது உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே இறைவன் அதே திருக்குர்ஆனில் சொன்ன முஹம்மது நபி உங்களுக்கோர் ஒரு அழகிய முன் மாதிரி என்ற எடுத்துக்காட்டை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? ஒன்றை ஏற்றுக் கொண்டு, இன்னொன்றை மறுப்பதென்பது, யூதர்களின் வழியாக இருந்தது. அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அதையேதான் நீங்களும் சொல்கிறீர்கள். தனது மனதின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஏற்பதும் மறுப்பதும் நியதி அல்ல, அது நம்பிக்கையும் அல்ல.

நேசகுமாரின் திருக்குர்ஆன் விளக்கங்களைப் பார்க்கும்போது அது அவருடைய புரிந்துக் கொள்ளும் கடினத்தையும் மற்றும் வேண்டுமென்றே கையாளப்படும் வன்முறை வாதமாகத்தான் தெரிகிறது.

ஒன்றை நேசகுமாரும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வாழ்வின் பெரும்பாண்மையான இடற்பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத்தான் சொல்கிறது. அதே நேரம் அதன் தீர்வுகள் இன்றைக்கு கடினமாகவோ அல்லது அறிவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாததகவோ இருந்தாலும் அது பிரிதொரு (எதிர்) காலத்தில் அவசியமாக இருக்கும். அதனால்தான் அது எக்காலத்திற்கும் ஏற்ற மறையாக இருக்கிறது. திருக்குர்ஆன் அனுமதிப்பதை கட்டளையாக அர்த்தம் செய்து கொண்டு அதற்கு விளக்கமளித்து வில்லங்கம் செய்யும் நேசகுமார் இதைத் தெரிந்தே செய்கிறார் எனும்போது அவரை "பொய்யர்" என்று சொல்லுவதில் என்ன தவறு?.

6 comments:

மாமன்னன் said...

அப்துல்லா,


¿¡ý ÌÈ¢ôÀ¢ð¼ §Áü§¸¡û¸¨ÇÔõ §¸ð¼ §¸ûÅ¢¸ÙìÌõ À¾¢ø ÅáŢð¼¡Öõ ÀÚ¢ø¨Ä. ²ý ±ýÚ ±ÉìÌô Ò⸢ÈÐ.
இஸ்லாம் ஏன் உலகத்திலேயே சிறந்த மதம் என்பதன் காரண காரியங்களை எழுத ஆரம்பித்துவிட்டீர்களா? காத்திருக்கிறேன்.


ஆரோக்கியம்

மாமன்னன் said...

அப்துல்லா,


நான் குறிப்பிட்ட மேற்கோள்களையும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் வராவிட்டாலும் பரவாயில்லை. ஏன் என்று எனக்குப் புரிகிறது.
இஸ்லாம் ஏன் உலகத்திலேயே சிறந்த மதம் என்பதன் காரண காரியங்களை எழுத ஆரம்பித்துவிட்டீர்களா? காத்திருக்கிறேன்.


ஆரோக்கியம்

Abdullah said...
This comment has been removed by a blog administrator.
Abdullah said...

ஆரோக்கியம்,

நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுதி வருவதிலிருந்தே உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும், இஸ்லாம் மதம் மற்ற மதங்களைவிட உயர்வானதென்று.

உங்களைப் பொறுத்தவரை நீங்கள் விவாதத்திற்கு தயார் என்று சொல்லிவிட்டு விவாதம் செய்ய விரும்பாமல், வெறும் கேள்வி பதில் நிகழ்ச்சியாக செய்ய விரும்புவதால்தான் நான் உங்களின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்கான காரணத்தையும் நான் எழுதியுள்ளேன். விவாதத்தை இது போன்று சம்பந்தமில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் விவாதம் செய்யலாம் அதற்கான மட்டுறுத்துணர்களுடன்.

மாமன்னன் said...

//நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுதி வருவதிலிருந்தே உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும், இஸ்லாம் மதம் மற்ற மதங்களைவிட உயர்வானதென்று. //

அப்படி போடுங்கள். இதுவல்லவோ லாஜிக். இஸ்லாம் மற்ற மதங்களை விட உயர்வானதற்கான இருப்பதன் ஒரே நிரூபணம், நீங்கள் மறுப்பு எழுதுவதுதான். நீங்கள் மறுப்பு எழுதவில்லை என்றால் அது மற்ற மதங்களை விட இழிவானது என்று நிரூபணம் ஆகியிருக்கும்.

%^%
இஸ்லாம் போன்ற அடாவடி மதங்களின் விவாதத்துக்கு எந்த புத்திசாலியும் மட்டுறுத்துனராக இருக்க வரமாட்டார்கள். ஆகவே, நீங்கள் ஏன் இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறப்பானது என்று காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்குங்கள். அதற்கு பதில் எழுதுகிறேன். நீங்களே அதற்கு மட்டுறுத்துனராக இருங்கள்.

Abdullah said...

ஆரோக்கியம்,

புத்திசாலியான நீங்கள்தான் சொல்லுங்களேன், குறைந்த பட்சம் இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது என்ற பெயரையாவது? அடையாளம் காட்டுவதற்குக் கூட தகுதி இல்லாமல் விவாதம் என்று வருவது விந்தையாக இருக்கிறது.