Sunday, May 15, 2005

ஆரோக்கியமான விவாதம்

நண்பர் ஆரோக்கியம் எனது வலைப்பதிவில் பின்னூட்டத்தின் மூலமாக 'நான் விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேற உரிமையில்லை, அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனையே என்றும் அது தொடர்பாக தனது பதிவிலே ஒரு சில விளக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அவரது இந்த குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கு முன்னர் ஒரு சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

'முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள்' என்ற தீர்மானத்துடன் விவாதம் செய்ய வருகிறாரா? அல்லது இஸ்லாம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று விவாதம் செய்ய வருகிறாரா? திறந்த மனதுடன் விவாதம் செய்தால் அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும், இல்லையென்றால் நேசகுமார் அவர்கள் செய்வதுபோல் அது ஒரு 'எழுத்து தீவிரவாதமாகத்தான்' அமையுமே ஒழிய 'கருத்து மோதலாக' இருக்காது. ஆம், கண்டதையும் கேட்டதையும் வைத்து, கதை எழுதி அங்கங்கே வினாக்களையும் விமர்சனங்களையும் எழுப்பிவிட்டு அதற்கான விளக்கங்களையோ அல்லது விடைகளையோ படிக்க மாட்டேன் என்று எழுதுவதற்கு 'எழுத்து தீவிரவாதம்' என்றுதான் பெயர்.

இஸ்லாத்திற்கு எதிராக விமர்சனங்கள் செய்வோரில் பெரும்பாலோர், இஸ்லாத்திற்கெதிரான வெப்சைட்டுகளிலும், புத்தகங்களிலும் உள்ளதைப் படித்துவிட்டு, அதில் தனக்கு சாதகமான கருத்துள்ள விமர்சனங்களாக இருந்தால் அதை எடுத்து ஆஹா ஓஹோ என்று அலங்காரப் படுத்தி எழுதுவதே இயல்பு. ஆரோக்கியம் அவர்களும் அப்படியா?

அப்படித்தான் என்றால் இங்கொன்றும் அங்கொன்றுமாக விவாதம் செய்து பலனில்லை.

ஆரோக்கியத்தின் வினாக்களிலிருந்தே விவாதம் தொடங்கலாமா? சரி என்றால் எனது வினாக்களுக்கு முதலில் அவர் விடையளிக்கட்டும், பிறகு முஸ்லீம்களுக்கு மதம் மாற உரிமையிருக்கிறதா என்ற கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்.

எனது கேள்வி (1) இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதமாக போற்றப்படுகிறது?

நன்றிகள்.

12 comments:

மாமன்னன் said...

பின் லாடனை விட சிறந்த மனிதர் யார்? ஏன்?

** மேற்கண்ட கேள்விக்கு விடை என்னவோ அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையும். விளக்க வேண்டுமென்று கேட்டால் விளக்குகிறேன்.

*
அதற்கு முன்னால்..
இப்போது நான் மொழி பெயர்த்த இஸ்லாமிய அறிஞரது அறிவுரையை படித்துவிட்டு எழுதிய கேள்விகளுக்கு விடைகளைக் கூறுங்கள்.
*

Abdullah said...

பின்லாடினைவிட சிறந்த மனிதர்கள் எத்தனையொ பேர் இருக்கலாம். ஏன் நீங்கள் கூட இருக்கலாம். ஆனால் சிறந்தவன் யார், சிறப்பற்றவன் யார் என்பதற்கு என்ன அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்துதான் சிறப்பும், தாழ்வும். சத்தம் போட்டு சொல்வதெல்லாம் சத்தியமும் ஆகாது, வலுவானவன் செய்வதெல்லாம் நியாயமும் ஆகாது.

ஆரோக்கியம், நீங்கள் எனது பதிவுகளை திரும்பவும் படியுங்கள். நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் சொல்கிறேன், விவாதம் என்பது வேறு, கெள்வி பதில் என்பது வேறு. நீங்கள் தற்போது செய்துவது வெறும் கேள்வி கேட்பது மட்டுமே. ஒரு கேள்விக்கு பதில் அல்லது விளக்கம் கிடைத்தவுடன் அதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது மௌனமாக அடுத்தக் கேள்விக்கு சென்றுவிடுவதற்கு பெயர் விவாதம் அல்ல.

அடுத்து உரிமையைப் பற்றி பேசுகிறீர்கள். உரிமைக்கு என்ன அளவுகோல்? பசியுடன் இருக்கும் ஒருவன் உணவில்லாமல் யாரிடத்திலிருந்து எதையாவது திருடி உண்டு விட்டால் அவனைத் திருடன் என்றுதான் சட்டம் தண்டிக்குமே தவிர்த்து, பாவம் பசியுடன் இருந்த காரணத்தால் அவனுக்கு திருடும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வீர்களா? ஒரு பிள்ளை நெருப்பில் கையை வைத்து விளையாடியே தீர்வேன் அடம்பிடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள், அந்த குழந்தையின் தாயிடம், பாவம் குழந்தை ஆசைப்படுகிறது, ஆசைப்படுவது அதன் உரிமைதானே, குழந்தை நெருப்புடன் விளையாட அனுமதியுங்கள் என்று சொல்லுவார்களா அல்லது அந்த தாயும் தான் குழந்தையின் விருப்பத்தை நிறைவெற்றுவாளா? உரிமைக்கு என்ன அளவுகோல்?

விவாதம் செய்ய வலு இருந்தால் இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது என்று எடுத்து முன் வையுங்கள், அங்கே இந்த மதம் மாறும் உரிமைகளுக்கான விடையும் வந்துவிடும்.

மாமன்னன் said...

என் பதிலை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை.

இருப்பினும் விளக்குவேன் என்று சொன்னதால், விளக்குகிறேன்.

பின் லாடனை விட சிறந்த மனிதர் யார்? ஏன் என்று கேட்பது போன்றதுதான் உங்கள் கேள்வியும். பின் லாடனை விட என் பக்கத்துவீட்டுக்காரர் சிறந்த மனிதர். அதற்கான காரணம் எனக்கு உண்டு. அதே கேள்விக்கு உங்களிடம் பதில் வேறானதாகவும், அது உங்களுக்குத்தெரிந்த வேறு யாருமோ இருக்கலாம். அல்லது பின்லாடன் தான் சிறந்த மனிதர் என்பது உங்கள் பதிலாகவும் இருக்கலாம்.

ஆனால் அது அல்ல நீங்கள் செய்ய முனைவது. பின் லாடனை விட சிறந்த மனிதர் யாரும் இல்லை என்பது உங்களது முன் முடிவு. அதனை நிறுவும் பொருட்டு, மற்றவர்களை யாரேனும் கை காட்டும் பட்சத்தில் அந்த ஆள் மீது உள்ள குறைகளை பட்டியலிட்டு அதன் மூலம், பின் லாடனை சிறந்தவர் என்று ஒப்புக்கொள்ள வைக்கும் வினோதமான வாதம் இது. இதுதான் வெகுகாலமாக இஸ்லாமியர்களால் செய்யப்பட்டு வருகிறது. என் பக்கத்து வீட்டுக்காரன் சுவரில் ஒண்ணுக்கு அடித்தான் என்பதனை குற்றம் சாட்டி பின் லாடன் செய்யும் கொலைகளை நியாயப்படுத்தும் வேலை இது. "நீ மட்டும் ஒழுங்கா?" என்று கேட்டு அதன் மூலம் உங்களை உத்தமர் என்று காட்டிக்கொள்ள செய்யும் முயற்சி. இதுவே தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றமையால், அதனை இந்த உதாரணம் மூலம் சுட்டிக்காட்டினேன். "நீ மட்டும் ஒழுங்கா?" என்ற கேள்வி, நானும் ஒழுங்கில்லை என்பதனையே கூட கூட்டிக்கொண்டு வருகிறது. ஏன் கொரியாவில் இருக்கும் ஒரு மதம் இஸ்லாமை விட சிறந்த மதம். ஏனெனில், அதில் சேரவில்லை என்றால் நீ செத்தாய் என்று யாரிடமும் குத்த வருவதில்லை.

என்னைப் பற்றி ஒன்றும் தெரியாமலேயே, என்னை இந்துத்துவா வெறியன் என்று அழைத்து பதிவுகள் எழுதப்பட்டுவிட்டன. இப்படி முத்திரை குத்தினால்தான் அனுதாபம் முஸ்லீம்கள் பக்கம் திரும்பும் என்று கருதி செய்யப்படுகிற விஷயம். அது வெற்றிகரமாகவே இதுவரை நடந்து வருகிறது.

இந்துத்வா ஒரு சுண்டு விரல் ஒத்தடத்துக்குப் பிரயோசனம் இல்லாத ஒரு கும்பல். இது இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பேய் முழி முழிக்கிறார்கள். உங்கள் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்த பின்னாலும், ஒரு வருடம் போர்வீரர்களை எல்லையோரம் நிறுத்தி வைத்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள் இந்த இந்துத்வா ஆட்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் ஒரே வலிமை புஷ்-ரிபப்ளிகன் ஆட்களுக்கு மட்டுமே உண்டு. அதற்கு வாடிகன்-எவாஞ்சலிகல் கிரிஸ்துவ கூட்டணி அவசர தேவை. ஆனால், பொலிடிகலி கரெக்ட் சிக்கல்களில் அவர்களும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. ஏற்கெனவே இப்படிப்பட்ட பொலிடிகலி கரெக்ட் சித்தாந்தங்களால் ஐரோப்பா காயடிக்கப்பட்டுவிட்டது. அடுத்து அமெரிக்கா ஆகாமலிருக்க ஏதேனும் ஒரு கடவுள் (இருந்தால்) அருளட்டும்.

Abdullah said...

ஆரோக்கியம்,

ஒப்பீடு என்பது ஒரு வகையான அளவுகோல். இஸ்லாம் சிறந்ததா இல்லையா என்பதை இந்து மதத்துடனும், கொரியாவில் இருக்கும் மதத்துடனும் ஒப்பீடு செய்வதில் தவறில்லை. இஸ்லாம்தான் பெரும்பான்மையான இடங்களில் வசைபாடப் பட்டுள்ளதே தவிர்த்து, இஸ்லாம் வேறு எந்த மதத்தையும் வசைபாடுவதில்லை. புரிந்துக் கொள்ளுங்கள். முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்று ஊமைகளையும், செவிடுகளையும், கைகால் இழந்தவர்களையும் தடாவிலும், போடவிலும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனரே தவிர்த்து, இந்து தீவிரவாதிகள் எல்லாம் தாராளமாக உலா வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காயம் படாமலும் விவாதிக்க முடியும், விவாதிப்பவர்களிடம் முதிர்ச்சி இருந்தால். உங்களால் முடியும் என்றால் வாருங்கள் விவாதிக்கலாம். நான் யாரையும் கயம்படுத்த விரும்பவில்லை. ஆனால் என்னை யாரும், காயப்படுத்தினால் நான் விட்டுவிட்டு தேடிக் கொண்டிருக்கமாட்டேன்.

மாமன்னன் said...

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/019.smt.html#019.4292

Book 019, Number 4292:
Ibn 'Aun reported:
I wrote to Nafi' inquiring from him whether it was necessary to extend (to the disbelievers) an invitation to accept (Islam) before m". ing them in fight. He wrote (in reply) to me that it was necessary in the early days of Islam.
The Messenger of Allah (may peace be upon him) made a raid upon Banu Mustaliq while they were unaware and their cattle were having a drink at the water. He killed those who fought and imprisoned others. On that very day, he captured Juwairiya bint al-Harith. Nafi' said that this tradition was related to him by Abdullah b. Umar who (himself) was among the raiding troops.

இப்ன் அவுன் கூறினார்:
நான் ந·பி அவர்களிடம், கா·பிர்களோடு போரிடும் முன்னர் அவர்களுக்கு இஸ்லாத்தை தழுவும்படி கோரிக்கை வைக்க வேண்டுமா என்று கேட்டு எழுதினேன். அதற்கு பதிலெழுதிய அவர், இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் தேவையாக இருந்தது என்று எழுதினார்.
பானு முஸ்டாலிக் ஜாதியினர்களது ஆடுமாடுகள் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கும் போது, அவர்கள் அறியாவண்ணம் அல்லாவின் தூதர் அவர்கள் மீது போர் தொடுத்து அவர்களில் பெரும்பாலோனோரை கொன்று மீதமிருப்பவரைச் சிறை பிடித்தார். அதே நாளில், அவர் சுவாரையா பிந்த் அல் ஹரித் அவர்களையும் சிறை பிடித்தார். இந்த திடீர் தாக்குதலில் பங்கெடுத்த போர்ப்படையில் வேலை செய்த அப்துல்லா உமர் அவர்களே இதனை தன்னிடம் தெரிவித்ததாக ந·பி கூறினார்.

See the reference to your heart's content.
http://ennamopo.blogspot.com

This is the peaceful religion.

Abdullah said...

Arokkiam,

Can you explain the definition of 'peaceful religion?'

Also, please explain how to protect the peace in case attack against peace?

Thanks

இளவெண்ணிலா said...

//இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதமாக போற்றப்படுகிறது?//

அப்துல்லா சார்,
படிக்கவே "திக்"னு இருக்கு...ரொம்ப குரூரமான "காமெடி"-ங்க உங்களுது.. அது எப்டிங்க முஸ்லீம் மக்கள் எல்லாரும் சொல்லி வச்சாப்ல "மனசாட்சி" -யே இல்லாம இருக்கிங்க...

நல்லடியார் said...

புலிப்பாண்டி சார், நல்லாவே கலாய்க்கிறீங்க.

ஒரு சதாம் உசேனை ஒடுக்கிறேன் என ஒரு லட்சம் குழந்தைகளை கொன்று குவித்ததும், அமைதிப்படை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்ததும் உங்கள் கண்ணுக்கு தீவிரவாதமாகவே தெரியலையா?

பின்லாடன் என்ன, நம்ம புலிப்பண்டியை அமெரிக்கா தீவிரவாதி என அறிவித்தால் பின்லாடனை விட புலிப்பாண்டிதான் தீவிரவாதி. என்ன சொல்றது சரிதானே?

வீரப்பனால், "இந்து தீவிரவாதம்" என பேசப்படுவதில்லை. ஜார்ஜ் புஸ், டோனி பிளேயர் இவர்களால் "கிறிஸ்தவ தீவிரவாதம்" என எழுதப்படுவதில்லை. ஆனால் பின்லாடன் என்றதும் "இஸ்லாமிய தீவிரவாதம்".

மீடியாக்காரர்களின் மனசாட்சியை நினைத்தால் புல்லரிக்குது போங்க!

Abdullah said...

புலிப்பாண்டி,

இஸ்லாத்தைவிட சிறந்த மதம் இதோ இருக்கிறது என்று சொல்லுங்கள். காரண காரியங்களை அலசுவோம். அதை விட்டுவிட்டு, ஏன் தேவை இல்லாத சுற்றி வளைத்து கதையும் காமெடியும் சொல்லும் வேலைகள். உங்களின் வெங்காயம் அழுகுவதற்கு முன்னார் காரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே?

மற்ற மதங்களைவிட இஸ்லாம் சிறந்த மதம் என்று நான் துணிவோடு சொல்லுவேன் அதற்கான காரணங்களை என்னால் எடுத்து வைக்க முடியும், உங்களுக்கு முடியுமனால் உங்களின் காரணங்களை எடுத்து வையுங்கள். அதுதான் ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் புரிதலை பொறுத்த விஷயம்.

மாமன்னன் said...

புலிப்பாண்டி சார், ரொம்பவும் துள்ளாதீர்கள். என் மதத்தை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், கத்தி கம்புடன் நாகூருக்கு தேடி வந்து கதவைத்தட்டுவார்கள் என்று இருந்தால் நீங்களும் "இஸ்லாமே சிறந்த மதம்" என்று 2000 பக்க புத்தகம் எழுதுவீர்கள். (தட்டியிருகிறார்கள்!)

உயிர்ப்பயம் வந்தபின்னால், மனசாட்சியாவது ஒண்ணாவது.. போங்க சார் சிரிப்பு மூட்டுகிறீர்கள்..

ஆரோக்கியம்

பாபு said...

நபியை நஃபி என்று எழுதுகிறார்களே இதிலருந்தே தெரியவில்லையா...................Their UnderStandings on Islam.

மாமன்னன் said...

பாபு,
இங்கு நஃபி என்பது வேறொரு நபர். மேற்கண்ட ஹதீசை சரியாகப் படியுங்கள். அது நபி அல்ல.
எழவு. உங்களுக்கு தமிழும் தெரியாது. ஆங்கிலமும் புரியாது. முல்லா சொல்வதை வாந்தி எடுக்க மட்டும் தெரியும்.