நேசகுமாரிடம் நான் அவர் எழுதியதிலிருந்து இரண்டு கேள்விகளும் அதற்கான விளக்கமும், ஆதாரமும் கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதிலில்லை. அத்தனை சீக்கிரம் பதில் வராது என்று தெரிந்திருந்துதான் கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் இந்த பக்கமே வராமல் சொந்த வேலைகளில் கவனமாக இருந்தேன். உடனே பதில் சொல்லக் கூடியவராக இருந்தால் அவர் உண்மையிலேயே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை செய்துவருகிறார் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ளலாம். அவர் செய்து வருவதெல்லாம் வெறும் அவதூறு பிரச்சாரங்கள் மட்டுமே. அதையும் ஒழுங்காக செய்கிறாரா என்றால் அதிலும் குறைபாடு. காரணம் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வேண்டுமென்றே ஒரு தவறை எத்தனை காலம்தான் செய்யமுடியும். அவரும் மனிதர்தானே, அதனால அவருக்குள்ளேயே முன்னுக்கு பின் முரன்பாடுகளும், குழப்பங்களும், தடுமாற்றமும். நடக்கட்டும்.
இடைப்பட்ட காலத்தில் அரசியல் இஸ்லாம், ஆன்மீக இஸ்லாம் என்று வழக்கம்போல் புலம்பல்கள். வெறும் புலம்பல்கள்தானே இதற்கு ஏன் பதிலும் விளக்கமும் என்று ஒரு சிலர் கேட்கலாம். பொது இடங்களில் ஒரு மனிதர் அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ இன்னும் பைத்தியக்காரன் போல் போவோர் வருவோர் மேல் எல்லாம் சேற்றை வாரி அடித்துக் கொண்டிருந்தால் அதை நடக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா? அது போன்றுதான் இந்த பதில்களும் அவ்வப்போது அவசியமாகிறது.
இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர் சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். நான் அப்படித்தான் சேறுகளையும் சாக்கடைகளையும் அள்ளித் தெளிப்பேன், சொரணையும் புத்தியும் இருந்தால் துடைத்துக் கொண்டு செல்லட்டும், இல்லையென்றால் சுமந்துக் கொண்டுதான் செல்லட்டுமே என்று சொல்லிவிட்டுத்தான் செய்கிறார். தொடரட்டும்.
'தெருவில் நடைபாதையில் கிடக்கும் முட்களை ஓரமாக எடுத்தெரிவதும்' இறைவழிபாடுதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கிணங்க அறிவுப்பாதையின் நடுவிலே வேண்டுமென்றே நேசகுமார் போன்றவர்களால் எடுத்தெரியப்படும் அறிவுக்கு சம்பந்தமில்லா விஷயங்களை களைவதும் இறைவழிபாடுதான். இப்படி ஒரு வழிபாட்டை செய்வதற்கு வாய்ப்பளித்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
'நபிகளார் கடவுளைவிட அதிகாரம் நிறைந்தவராக கற்பிதம் செய்யப்படுகின்றன' என்று நபிகளாரை பிரதம மந்திரி போன்றும் கடவுளை ஜனாதிபதி போன்றெல்லாம் இவர் கற்பிதம் செய்து கதை எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறார். கண்டதையும் கேட்டதையும் வழிபாடு செய்து, கடவுளாக்கி, காணிக்கை செலுத்திவாழும் வழக்கத்தை கொண்டவர்களுக்குத்தான் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாது.
மாமனிதர் என்ற தலைப்பிலே அபூ உமர் அவர்கள் எழுதியதை நேசகுமாரும் அவருடைய எழுத்தை ஆராதிப்பவர்களும் கொஞ்சம் படித்துப் பார்த்தால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புரிந்துக் கொள்ளமுடியும்.
'தம்மை உண்மையாக விசுவாசித்தவர்களுக்கும், தமது மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் சிபாரிசு செய்வார்' என்று எழுதிவிட்டு, கடத்தல்காரர்களுக்கும், குழந்தைகளை கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும், மாற்றுமதப் பெண்களை கற்பழிப்பு செய்பவர்களுக்கும் பரிந்துரைப்பார்' என்று விஷம் பூசிய எழுத்துக்களை எழுதியிருந்தார். இவரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?
'அல்லாஹ்வின் கருணையைக் கொண்டுதான் நபி அவர்களே, தானே சொர்க்கம் செல்லமுடியும்' என்று சொல்லியிருக்கும்போது எப்படி நபியவர்கள் கடவுளைவிட அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடியும். அவருடைய தோழர்கள் ஆச்சர்யத்துடன் 'யா ரசுலூல்லாஹ்.. உங்களுக்கே இந்த நிலைதானா? என்று கேட்கும்போது.. ஆமாம் என்று பதிலளித்தார்கள்.
வெறும் முஸ்லீமாகிவிட்டால், ஏக இறைவனை ஏற்றுக் கொண்டுவிட்டால் மட்டுமே ஒருவன் நபிகளாரின் சிபாரிசிற்கு ஆளாகிவிடமுடியும் என்று நினைப்பது எப்படியிருக்கிறதென்றால் ஒருவன் பிராமணனாக பிறந்துவிட்டால் அவன் எப்படி பிரம்மனுக்கு நெருங்கியவனாக கருதப்படுகிறானோ அப்படியிருக்கிறது. ஒரு மாணவன் எல்லா நாட்களிலும் பள்ளி சென்று வந்துவிட்டால் பாஸாகிவிடமுடியுமா? நேசகுமார் போன்ற ஆசிரியர்கள் இருந்தால் அதுகூட சாத்தியமானலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. படிக்க வேண்டாம், பரிட்சை எழுத வேண்டாம், பள்ளியையும் ஆசிரியரையும் நம்பி ஏற்றுக் கொண்டு தினமும் பள்ளிக்கூடம் சென்று வந்துவிட்டால் மட்டும் போதும், ஆசிரியர் சிபாரிசு செய்து பாஸாக்கிவிடுவார்.. என்னய்யா வியாக்கியானம் இது?
அரசியல் அச்சுறுத்தல்கள் முடிந்து இப்போது ஆன்மீக அச்சுறுத்தல்கள் என்று நேசகுமார் வளர்ச்சி அடைந்துள்ளார். அதாவது மற்ற மதங்களெல்லாம் நரக எச்சரிப்பை விட்டு வளர்ச்சி அடைந்துவிட்டனவாம், இஸ்லாம் மட்டும் இன்னும் கற்காலத்திலேயே இருந்துக் கொண்டு நரகம் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றனவாம். இந்து மதத்திலும் கிறிஸ்துவ மதத்திலும் இருக்கிற மதகுருமார்கள் எல்லோரும் கூடி நரகம் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களை எல்லாம் களைந்துவிட்டு இனி மக்களுக்கு அன்பை மட்டுமே போதிப்பதென்று முடிவெடுத்துவிட்டார்களோ?
'ஏனைய மதங்களெல்லாம் நரகக் கட்டங்களைவிட்டு நகர்ந்துவிட்டன' என்ற அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஏனைய மதங்களில் இருப்பவர்கள் எல்லாம் இப்போது நல்லவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், தீயதை ஒழிப்பவர்களாகவும், தியாகச் சிந்தனை கொண்டவர்களாகவும் மாறிவிட்டதால் மற்ற மதங்கள் எல்லாம் இனி நரகத்தைப் பற்றி பேசுவதில்லை என்று மாறிவிட்டனவோ? ஏன் இப்படி தடுமாறுகிறார் நேசகுமார். நரகத்தைவிட்டு தாண்டிவிட்டதனால்தானோ பெரியவாளும் சிறியவாளும் சேர்ந்து இப்படி காமக் கூத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?
எல்லா மதத்திலும் எல்லா அயோக்கியர்களும் இருக்கிறார்கள். மதத்தின் பெயர் சொல்லி தன் சொந்த வயிற்றை நிரப்பும் மனிதர்கள் இருக்கிறார்கள் இதுதான் எதார்த்தம். எதார்த்தத்தை எழுதுவதாக வேறு ஒரு பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். பெரும்பான்மையான முஸ்லீம்களைப் பற்றி எதார்த்தத்தை எழுதுவதாக எழுதியிருக்கிறார். முஸ்லீம்களும் தவறு செய்பவர்கள்தான், இதில் என்ன விந்தை. சின்ன சாமியார்களிடம் தொடங்கிய இந்த காமக் கலாச்சாரம் இப்போது பெரிய சாமியார் வரை வந்துவிட்டது, இது எதார்த்தம். இந்த எதார்த்தத்திற்க்காக இருக்கிற சாமியார் மடங்களை எல்லாம் இனி மூடிவிட வேண்டியதுதானே. மாறிவரும் இந்து வேதங்களிலிருந்து இனி சாமியார், சந்நியாசி போன்ற விஷயங்களை எல்லாம் எடுத்துவிட்டால் இது போன்ற தவறுகள் இனி நடக்காதுதானே. எதார்த்தம் அய்யா.. கோபாப் படாதீர்கள்.
வழக்கம்போல் ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்று எந்தவிதமான உள்வாங்குதலையும், தான் எழுதியது என்னவென்று திருப்பிப் பார்க்காமலும் பல விஷயங்களை, தவறுகளை எழுதியிருக்கிறார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் 'ஜிஸ்யா வரியாகவும் கொள்ளையிட்ட பணமாகவும் 10,000 திர்ஹம்' அரசு கஜானாவில் இருந்ததென்று எழுதி அதை வைத்துக் கொண்டு நபிகளின் வாரிசுகள் அனுபவித்தது போன்றும் எழுதியுள்ளார். இதற்கான விளக்கமும் ஆதாரமும் வேண்டும். (ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டுமென்று எனது முந்தைய பதிவில் விளக்கியுள்ளேன்) அதாவது எங்கிருந்து இந்தப் பணத்தைக் கொள்ளையடித்து வந்தார்கள், நபிகளின் வாரிசுகள் யார் யார் இந்தப் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள் என்ற விபரம் தரமுடியுமா?
இது மூன்றாவது கேள்வி.
அடுத்து ஒரு அட்டவணை தயார் செய்து பதிவில் வைக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு அட்டவணை எனது பதிவில் இருந்தால் அடுத்தமுறை நேசகுமாருக்கு அதைப் பார்த்து இன்னென்ன கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்று சாவகாசமாக பதிலளிக்கலாம் அல்லவா? காரணம் அவருக்கு அவதூறுகளை வீசி வீசி எதற்கு யார் விளக்கம் கொடுக்கிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை, அதனால்தான் அபூ முஹை அவர்களின் கேள்விகளை வேறு ஒருவரிடம் (அனானிமஸ்) கேட்டுக் கொண்டிருக்கிறார்.
(ஒரு வேளை இப்படி அவருடைய பதிவில் அனானிமஸாக பதில் எழுதுவதும் அவரேதானோ? எதார்த்தமான சிந்தனை அய்யா.. எங்களுக்கெல்லாம் எதார்த்தமான சிந்தனை வரக்கூடாதா?)
7 comments:
Mr. Simhan,
He can not do objective discussions. He is incapable of doing it. The least I expect from him is to be more reasonable than mere accusations.
Thanks
Abdullah
அப்துல்லா,
நான் விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன். இந்த விவாதம் உங்களை மதம் மாற்றி கிரிஸ்துவராகவோ இந்துவாகவோ ஆக்க அல்ல. அந்த சுதந்திரத்தை இஸ்லாம் உங்களுக்கு கொடுக்கவில்லை. (யாருக்கும் கொடுக்கவில்லை) இஸ்லாமின் கொடிய முகத்தை கண்டாலும் உங்களால் அதிலிருந்து வெளியே வர முடியாது. "எம்மதமும் சம்மதம்" என்று உளறும் சிலரது கண்களை திறக்கவே இந்த விவாதம்..
வாருங்கள்.. http://ennamopo.blogspot.com
ஆரோக்கியம்,
நான் இந்த வலைப்பதிவிற்கு வந்ததே நேசகுமார் என்ற நபரின் அர்த்தமற்ற, ஆதரமற்ற, கபடத்தனமான விளக்கங்களை எதிர்க்கவும், காரண காரியங்களை அதனுடைய அர்த்தங்களுக்கு உட்பட்டு விவாதிக்கவும்தான். ஆனால், வெறும் விமர்சனங்களை மட்டுமே வீசுவேன், விவாதம் செய்ய மாட்டேன் என்ற மனநிலையுடன் அவர் இதுவரை என்னுடைய கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், இன்னும் சொல்லப் போனால் என்னைப் போன்று இன்னும் சிலர் எடுத்துவைத்த கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் இருக்கிறார். பதில் சொல்ல இயலவில்லை என்பதே அவருடைய இந்த இரண்டு மாத விமர்சனங்களின் மூலம் நான் புரிந்துக் கொண்டது.
நல்லது.. தற்போது நீங்கள் இங்கே விவாதம் செய்ய வருகீறீர்கள். வாருங்கள். ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதுமே சிந்தனைகளை சீர்மையாக்கும், செம்மைபடுத்தும், புரியாத பல விஷயங்களை தெளிவாக்கும். வெறும் சேற்றை வாரி இறைப்பதுதான் நோக்கம் என்றால் நிச்சயமாக எந்த பலனும் இல்லை.
உங்களுடைய பதிலில், உங்களை மதம் மாற்றவேண்டும் நோக்கத்தில் அல்ல என்றும் அந்த உரிமையை இஸ்லாம் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இஸ்லாம் என்ற ஒரு மதத்தில்தான் ஒவ்வோரு மனிதனும் தனது மதத்தை புரிந்து, அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும் செயலால் முஸ்லீமாக இருந்தால்தான் அதை இறைவன் ஏற்றுக் கொள்வான். பெயர்தாங்கி முஸ்லீம்களாக இருந்தால் போதாது. இதிலிருந்தே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம், இஸ்லாம் என்ற மார்க்கம் மட்டும்தான் மக்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது உங்களது மார்க்கத்தை நீங்கள் புரிந்துக் கொண்டு செயல்படுத்துங்கள் என்று.
எனவே, இஸ்லாம் மார்க்கம் தவறானது என்று நீரூபித்துக் காட்டுங்கள்? இதைவிட சிறந்த மார்க்கம் இதுதான் என்று எதை நீங்கள் அடையாளப்படுத்தி அதையும் நிரூபித்துக் காட்டுங்கள், நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நமது விவாதத்தை விவாதத்தைத் தொடங்குமுன் எது ஆதாரம், எது ஆதாரமற்றது என்று எனது பதிவைப் படித்துப் புரிந்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்கவும், விளக்கவும் வாருங்கள். நானும் உங்களின் மதத்தைப் பற்றியும், உங்களின் கொள்கைகளைப் பற்றியும் விரிவாக கேட்க வெண்டியிருக்கிறது.
விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வெண்டுமென்றும், இதற்கு மட்டுறுத்துனராக யார் யார் இருக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு விவாதம் தொடங்கலாம்.
Mr. Abdulla!
There is nothing but hatred and absurd in such 'Arokiyam' comments.
I don't think they will follow logical arguments, as it is experienced with nesakumar's.
Anyhow, if your debate/discuusion will clarify many doubts on Islam for other readers rather than those of Arokiyams and 'Nesam's only in names, it will be certainly welcomed. Thanks
அப்துல்லா,
ஹதீதுக்களிலிருந்தும், இஸ்லாமிய "அறிஞர்கள்" எழுதியதிலிருந்தும் எடுத்து என்னுடைய பதிவில் நான் பதிந்திருக்கிறேன்.
சமீபத்தில் "உன் மனைவி இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அவளைக் கொல்" என்று "அறிவுரை" வழங்கப்பட்டிருப்பதை மொழி பெயர்த்திருக்கிறேன். அதன் மூலம் எங்கிருக்கிறது என்பதையும் இணைத்திருக்கிறேன்.
மேற்கோள்கள் குரானிலிருந்தும் நபிமொழியிலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான இஸ்லாமின் பதில் என்ன?
1)ஒரு பெண்ணுக்கு சுதந்திரமாக தன் மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டா இல்லையா?
2)முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தவன் அல்லது ஒரு முறை இஸ்லாத்தை தழுவியன் வேறொரு மதத்துக்கு போக உரிமை இருக்கிறதா இல்லையா?
**
முஸ்லீம்கள் இஸ்லாத்தை இப்படி பிரச்சாரம் பண்ணுவது மூக்கறுந்தவந், தன்னைப் போல மற்ற எல்லோரையும் மூக்கறுக்க, மூக்கறுந்தவர்களுக்கெல்லாம் சொர்க்கம் தெரியும் என்று பிரச்சாரம் செய்வது மாதிரி. இஸ்லாம் பொய் என்று தெரிந்தாலும், உங்களால் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் சக முஸ்லீம்களால் கொல்லப்படுவீர்கள். இந்தியாவில் முடியாமல் இருக்கலாம். ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் எல்லாம் இதே கதை. சட்டப்பூர்வமாக!
http://ennamopo.blogspot.com
//விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வெண்டுமென்றும், இதற்கு மட்டுறுத்துனராக யார் யார் இருக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு விவாதம் தொடங்கலாம்.//
அய்யா M.M. ராஜா,
உங்களின் கேள்விகளுக்கு உண்மையிலேயே இந்து மதத்தின் புகழையும், பண்பாட்டையும் அதன் கொள்கைகளையும் திறம்பட விளங்கியவர்கள் பதில் தரலாம். அதைத்தான் ஆரோக்கியம் அவர்களிடம் இஸ்லாம் மதத்தைவிட சிறந்த மதமாக எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லமால் திசைதிருப்ப முயல்கிறார்.
அவரது கேள்விக்கு எனது 'ஆரோக்கியமாக விவாதம்' என்ற அடுத்த பதிவிலெ விடையளித்திருக்கிறேன். நான் வீணாப்போனதுடன் நில்லாமல் தன்னை சுற்றியிருப்பவர்களும் வீணாகிப் போகவேண்டும் என்று நினைக்கும் கூட்டத்தில் உள்ளவர்கள்தான் அடுத்தவர் மேல் குற்றம் சுமத்தியே காலம் தள்ளுவார்கள்.
Post a Comment