Thursday, March 03, 2005

நேசகுமாரின் உள்ளொன்று புறமொன்று

நேசகுமாரின் "இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்" வலைப்பதிவிற்குள் சென்றபோது, எனக்கு முதலில் தென்பட்டது, வலைப்பதிவின் தலைப்பு "இஸ்லாம் முஸ்லீம் அல்லாதோர் பார்வையில்" என்று மாறியிருந்ததுதான். ஏன் இப்படி உள்ளொன்றும், புறமொன்றுமாக தலைப்பு இருக்கிறதென்று புரியவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதன் காரணத்தாலோ என்னவோ. அவரின் கருத்துக்களும், எழுத்து நடைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் எனக்கு காட்டுகின்றன.

ஒரு வேளை இது தொழில் நுட்பக் கோளாராகக் கூட இருக்கலாம். இந்த தொழில் நுட்பக் கோளாறு இயந்திரங்களுக்கும், வாகனங்களுக்கும் மேலும் கணினிகளுக்கும் மட்டும் ஏறபடக் கூடியதல்ல. மனிதர்களுக்கும் ஏற்படக் கூடியதுதான். இந்தக் கோளாறு, உடலின் அங்கங்களில் மட்டும் இருக்கும் போது, துன்பம் பாதிப்படைந்த அந்த மனிதனோடு மட்டும் நின்று விடுகிறது. ஆனால், மனிதனின் கட்டுப்பாட்டு தலைமையகமான மூளையிலும், அதைத் தொடர்ந்து வரும் சிந்தனையிலும் வரும் போது, அது பாதிக்கப்பட்ட மனிதனோடு நில்லாமல், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நேசகுமாரின் கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது எந்த விதமான கோளாறு, பாதித்திருப்பது எங்கே என்று படிப்பவர்களுக்கு புரிந்துவிடும்.

பிரச்சனைக்கு வருவோம். நேசகுமார் தனது கட்டுரை ஒன்றில் "நபிகளாரின் காலத்திலேயே, ஆன்மீக இஸ்லாம் பின் சென்று அரசியல் இஸ்லாம் முன்னிலைப் படுத்தப்பட்டு, சிலை வழிபாட்டையும் ஏனைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் முஹம்மது அவர்களின் நபித்துவத்தை மட்டும் மறுத்தளிக்காதீர்கள் என்ற கோரிக்கையே பிரதானப் படுத்தப் பட்டது" (1) என்ற அப்பட்டமான வரலாற்று பிதற்றல்களை எழுதியுள்ளார்.

இதன் மூலம் எனக்கு தோன்றக் கூடிய கேள்விகளுக்கு நேசகுமார் அவர்கள் பதிலளித்து, இஸ்லாத்தை எனக்கு நன்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒன்று, அவரது பிதற்றல்களுக்கான ஆதாரம். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்.

இரண்டாவது, இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, இறைவனுக்கு இணை வைத்தல் கூடாது என்பதே. எனவே, எப்படி நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உதறிவிட்டு, நீங்கள் சிலைகளை வேண்டுமானலும் வணங்கிக் கொள்ளுங்கள், ஆனால், என்னுடைய நபித்துவத்தை மட்டும் மறுத்துவிடாதீர்கள் என்று தனது கோரிக்கையை பிரதானப் படுத்தியிருக்க முடியும்?

நேசகுமாரின் வரிகள் "நபிகளாரின் காலத்திலேயெ" என்று அழுத்தமாகத் தொடங்கியிருப்பதால், பதில்கள் நபிகளாரின் காலத்திற்க்கு பிறகு வந்த கதை எல்லாம் இல்லாமல், நபிகளாரின் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு, பதில் சொல்ல வேண்டுகிறேன்.

பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!

குறிப்பு:
1) நபிகள் நாயகத்தின் வாழ்வு - அன்னை ஜைனப்பின் மணம் - இறுதி நபி சில விளக்கங்கள் - நேசகுமார் (திண்ணையில் வெளியான கட்டுரை 16/12/2004)

5 comments:

Anonymous said...

அப்துல்லாஹ்,

"பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி!" - எனக்கூறியிருக்கின்றீர்கள், நிச்சயமாக இதற்காகவாவது உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்.

இந்தப் பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கின்றீர்கள். இந்த இரண்டுக்கும் பதில் சொல்கிறேன். ஹமீது ஜா·பருக்கும், சலாஹ¤தீனுக்கும் நான் விடையளிக்க வேண்டியிருக்கிறது. முடிந்தால் அவர்களுக்கான விடையுடனேயே உங்களுக்கும் விடையளிக்க முயல்கிறேன். அல்லது, அது முடியாவிட்டால், அவர்களுக்கு பதிலளித்தவுடன் உங்களது இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்களை முன்வைக்கிறேன்.

தற்போது வேறு இரு கட்டுரைகளை எழுதிக் கொண்டிருப்பதால், உடனடியாக இஸ்லாம் குறித்து எழுதுவதை சற்றே தாமதித்து வருகிறேன். காத்திருக்கும் நேரத்தில், உங்களது கருத்துக்களையும் தொடர்ந்து எழுதுங்கள்.

- நேச குமார் -

Abdullah said...

நேசகுமார்,

பதில் எனக்கு நேரிடையாக கிடைப்பதையே விரும்புகிறேன். மற்றவர்களுக்கான பதிலுடன் வருவதை நான் விரும்பவில்லை. நிச்சயமாக தொடர்ந்து எழுதவும் கேட்கவும் இருக்கிறேன். Let us take one at a time to make it more specific and clarity to all readers including we both.

அப்துல்லாஹ்

அபூ முஹை said...

சகோதரர் நேசகுமாரின் ''இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்'' வலைப்பதிவுக்கும் சுட்டி கொடுத்திருக்கலாமே.

இருவரும் ஒரே தலைப்பு என்பது சிறு குழப்பத்தையாவது ஏற்டுத்திவிடும். சகோதரர் அப்துல்லாஹ் 'இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்' என்ற தமது வலைப்பூவின் தலைப்பை மாற்றி எழுதலாம்.

அபூ முஹை

சுட்டுவிரல் said...

வாருங்கள் அப்துல்லாஹ்- நல்வரவு.
அபூ முஹை என்பவர் சொல்வது ப் போல தலைப்பை மாற்ற வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.
காரணம், இஸ்லாம் குறித்த காழ்ப்புணர்வான கருத்துக்களையே வெளிப்படுத்துகின்றவர்களும் தலைப்புகளை க்கொண்டு(ம்) வாசகர்களை குழப்புகிற நிலையில், அறிமுகத்தை ச் சரியாக செய்துவரும் நீங்கள் ஏன் தலைப்பை மாற்றவேண்டும்?

எழுத்து ப்பதிவுகளாய் வலைப்பூக்களில் வலம்வரும் அபத்தங்களை இனங்காட்ட விழைகிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

சுட்டுவிரல் said...

வாருங்கள் அப்துல்லாஹ்- நல்வரவு.
அபூ முஹை என்பவர் சொல்வது ப் போல தலைப்பை மாற்ற வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.
காரணம், இஸ்லாம் குறித்த காழ்ப்புணர்வான கருத்துக்களையே வெளிப்படுத்துகின்றவர்களும் தலைப்புகளை க்கொண்டு(ம்) வாசகர்களை குழப்புகிற நிலையில், அறிமுகத்தை ச் சரியாக செய்துவரும் நீங்கள் ஏன் தலைப்பை மாற்றவேண்டும்?

எழுத்து ப்பதிவுகளாய் வலைப்பூக்களில் வலம்வரும் அபத்தங்களை இனங்காட்ட விழைகிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.